மருதாணி வைச்சு தூங்க பயமா இருக்கா? இனி 30 Mins போதும்... சிவப்பா மாறிடும்!

நான்சி மலர்

Henna tips

1. மருதாணி காய்ந்ததும், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து பஞ்சினால் லேசாகத் தொட்டு தடவி வரவும். இது மருதாணியை உதிராமல் பிடித்து வைத்து நிறத்தை அதிகரிக்கும்.

Henna tips | Gemini image

2. மருதாணி காய்ந்து உதிர்த்த பிறகு, தோசைக் கல்லில் 4-5 கிராம்புகளை போட்டு வரும் புகையில் கைகளை காட்டி சூடேற்றினால் நிறம் மிக அடர்த்தியாகும்.

Henna tips | Gemini image

3. மருதாணி வைப்பதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவிவிட்டு, சில துளிகள் யூக்கலிப்டஸ் எண்ணெய் தடவினால் சாயம் ஆழமாக இறங்கும்.

Henna tips | Gemini image

4. மருதாணி அரைக்கும் போது தண்ணீருக்குப் பதிலாக அடர்ந்த டீ அல்லது காபி டிகாக்ஷன் ஊற்றி அரைக்கலாம்.

Henna tips | Gemini image

5. மருதாணியை வழித்தெடுத்த பிறகு குறைந்தபட்சம் 4 முதல் 6 மணி நேரம் கைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Henna tips | Gemini image

6. மருதாணியை உதிர்த்தவுடன் தேங்காய் எண்ணெய் அல்லது விக்ஸ்/அமிர்தாஞ்சன் போன்ற பாம் தடவினால் கைகளுக்கு கதகதப்பு கிடைத்து நிறம் அடப்பாகும்.

Henna tips | Gemini image

7. மருதாணியை கத்தியாலோ அல்லது தண்ணீராலோ கழுவக் கூடாது. கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து உதிர்க்க வேண்டும்.

Henna tips | Gemini image

8. மருதாணி அரைக்கும் போது சில துளிகள் எலுமிச்சை சாறு அல்லது புளித்த தயிர் சேர்த்தால் சாயம் சீக்கிரம் பிடிக்கும்.

Henna tips | Gemini image

9. மருதாணி கலவையிலேயே சிறிதளவு கிராம்புப் பொடி அல்லது மிளகுப் பொடி கலந்து அரைத்தால் நிறம் தூக்கலாக இருக்கும்.

Henna tips | Gemini image

10. மருதாணி வைக்கும் போது கைகள் குளிர்ச்சியாக இல்லாமல் கதகதப்பாக இருந்தால் (Body heat) சாயம் விரைவாகவும் அடர்த்தியாகவும் பிடிக்கும்.

Henna tips | Gemini image
Comfort dress | Gemini image
வீட்டு உடைகளில் இவ்வளவு ட்ரெண்டா? நைட்டியை விட 100 மடங்கு கம்ஃபோர்ட் தரும் 10 ஆடைகள்!