முகப் பொலிவுக்காக நரம்பு வழி ஊசியா? திகைக்க வைக்கும் உண்மைகள்!

நான்சி மலர்

1. நரம்பு வழி ஊசி (IV Drip) மூலம் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்களை நேரடியாக ரத்த ஓட்டத்தில் செலுத்தும் முறை இதுவாகும்.

IV Drip | Gemini image

2. இதில் பொதுவாக வைட்டமின் சி, கிளுடாதயோன் (Glutathione), பி-காம்ப்ளெக்ஸ் மற்றும் பயோட்டின் போன்ற சத்துக்கள் கலந்திருக்கும்.

IV Drip | Gemini image

3. சருமத்தை வெண்மையாக்க, பளபளப்பாக்க, மற்றும் முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்க இது பயன்படுத்தப்படுகிறது.

IV Drip | Gemini image

4. செரிமான மண்டலத்தைத் தாண்டி நேரடியாக ரத்தத்தில் கலப்பதால், சத்துக்கள் உடலுக்கு உடனடியாகக் கிடைக்கின்றன.

IV Drip | Gemini image

5. நவராத்திரி, திருமணம் போன்ற விசேஷ காலங்களில் உடனடிப் பொலிவுக்காக (Instant Glow) இது பிரபலமடைந்து வருகிறது.

IV Drip | Gemini image

6. சரும அழகுடன் சேர்த்து, உடல் சோர்வைப் போக்கி உடனடி ஆற்றலையும் சுறுசுறுப்பையும் தர இது உதவுகிறது.

IV Drip | Gemini image

7. அழகுக்காக இதைச் செய்வதற்கு அறிவியல் பூர்வமான முறையான மற்றும் முழுமையான மருத்துவ ஒப்புதல் இல்லை.

IV Drip | Gemini image

8. முறையற்ற பயன்பாட்டால் ஒவ்வாமை (Allergy), தலைச்சுற்றல், நரம்பு வீக்கம் மற்றும் கடுமையான சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படலாம்.

IV Drip | Gemini image

9. தகுதியான தோல் மருத்துவரின் (Dermatologist) ஆலோசனை மற்றும் நேரடி கண்காணிப்பின் கீழ் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.

IV Drip | Gemini image

10. ஆரோக்கியமான உணவுமுறை, போதுமான தூக்கம் மற்றும் நீர்ச்சத்து மூலமாகவும் இயற்கையான சருமப் பொலிவைப் பெறலாம்.

IV Drip | Gemini image
Cracked heels remedy பாத வெடிப்பு | ChatGPT Image
பியூட்டி பார்லர் வேண்டாம்! பாத வெடிப்பை போக்கும் 10 வீட்டு வைத்தியம்!