ஷாம்புக்கு பதில் சோப்பு போட்டு தலைக்கு குளிக்கலாமா? உஷார்.. இதை கட்டாயம் படிங்க!

கிரி கணபதி

குளிக்கும் போது அவசரத்தில் பலரும் உடம்புக்குப் போடும் சோப்பையே தலைமுடிக்கும் தேய்த்துக் குளிப்பார்கள். ஆனால், ஷாம்புக்குப் பதிலாக சோப்பைப் பயன்படுத்துவது உண்மையிலேயே முடிக்கு நல்லதா அல்லது ஆபத்தா? இதோ அதற்கான தெளிவான விளக்கங்கள்.

Soap For Hair Wash

1. சோப்பின் pH அளவு மிக அதிகம். இது நமது தலையின் மிருதுவான சருமத்திற்குச் சற்றும் ஏற்றது அல்ல.

Soap For Hair Wash

2. சோப்பு தலைமுடியில் உள்ள இயற்கையான எண்ணெயை முற்றிலுமாக உறிஞ்சிவிடும். இதனால் முடி வறண்டு சணல் போல மாறிவிடும்.

Soap For Hair Wash

3. ரசாயனம் உள்ள சோப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் முடி கொட்டுவது பன்மடங்கு அதிகரிக்கும். வேர்க்கால்கள் பலவீனமடைந்து முடி எளிதில் உதிரத் தொடங்கும்.

Soap For Hair Wash

4. சோப்பு நுரை தலையில் சரியாக அலசப்படாமல் ஒருவித மெல்லிய படிமத்தை உருவாக்கும். இதனால் தலைமுடி சீக்கிரம் அழுக்காகி பிசுபிசுப்புத் தன்மையை அடையும்.

Soap For Hair Wash

5. தலையில் ஏற்படும் அதிக வறட்சியால் பொடுகுத் தொல்லை உடனடியாக ஆரம்பித்துவிடும். சருமம் செதில் செதிலாக உதிர்ந்து கடுமையான எரிச்சலைத் தரும்.

Soap For Hair Wash

6. சோப்பு போட்டுக் குளித்தால் தலைமுடியில் சிக்குகள் மிக அதிகமாக ஏற்படும். இதனால் சீப்பு வைத்து சீவும்போது அதிகப்படியான முடிகள் அறுந்து போகும்.

Soap For Hair Wash

7. ஷாம்புகள் முடியை சுத்தப்படுத்தவும் மிருதுவாக்கவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை முடியின் ஆரோக்கியத்தை எவ்வித பாதிப்பும் இன்றிப் பாதுகாக்கும்.

Soap For Hair Wash

8. உடம்பில் உள்ள கடினமான அழுக்கை நீக்க சோப்புகளில் ஸ்ட்ராங்கான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மென்மையான தலைமுடிக்கு எப்போதுமே பெரும் ஆபத்தாகும்.

Soap For Hair Wash

9. முடியின் நுனியில் பிளவுகள் மற்றும் வெடிப்புகள் (Split ends) ஏற்பட சோப்பு ஒரு முக்கியக் காரணமாகும். இது முடி ஆரோக்கியமாக வளர்வதை அடியோடு தடுத்துவிடும்.

Soap For Hair Wash

10. ஷாம்பு பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் உடனே சோப்புக்கு மாற வேண்டாம். அதற்குப் பதிலாக சீயக்காய் அல்லது அரப்பு போன்ற இயற்கை வழிகளைப் பின்பற்றுங்கள்.

Soap For Hair Wash

தலைமுடிக்கு சோப்பு பயன்படுத்துவது முடியின் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக்கொள்வதற்குச் சமம். உங்கள் தலைமுடி அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என நினைத்தால், உடம்புக்குப் போடும் சோப்பை ஒருபோதும் தலைக்குக் கொண்டு செல்லாதீர்கள்.

Soap For Hair Wash
Priyanka Chopra
அணிந்த சில மணிநேரத்திலேயே அதிசயம்!