கேம்பஸ் க்வீன் ஆகணுமா? அப்போ இந்த 10 லிப்ஸ்டிக் ஷேட்ஸ் உங்க பர்ஸில் கண்டிப்பா இருக்கணும்!

நான்சி மலர்

Trending lipstick shades:

​1. நியூட் பிங்க் (Nude Pink)

உதடுகளின் இயற்கையான நிறத்துடன் ஒத்துப் போகும். எந்தவித பகட்டும் இல்லாமல் எளிமையாகவும், நேர்த்தியாகவும் இருக்க விரும்பும் மாணவிகளுக்கு இதுவே முதல் தேர்வாகும்.

Trending lipstick shades | AI image

​2. பீச் (Peach)

முகத்திற்கு ஒரு பிரகாசமான மற்றும் புத்துணர்ச்சியான தோற்றத்தைத் தரும். குறிப்பாக காலை நேரக் கல்லூரி வகுப்புகளுக்குச் செல்ல இது மிகவும் ஏற்றது.

Trending lipstick shades | AI image

​3. பிங்க் (Soft Pink / Rose Pink)

எப்போதும் ஃபேஷனில் இருக்கக்கூடிய ஒரு நிறம். இது உங்களுக்கு மிக அழகான, சவீகமான மற்றும் டீசன்ட்டான தோற்றத்தைத் தரும்.

Trending lipstick shades | AI image

​4. மவ்ப் (Mauve)

பிங்க் மற்றும் பிரவுன் கலந்த ஒரு அழகான கலவை. லேசான ஊதா மற்றும் பிங்க் கலந்த இந்த நிறம் அனைத்து விதமான சரும நிறத்தினருக்கும் அழகாகப் பொருந்தும்.

Trending lipstick shades | AI image

​5. பிரவுன் நியூட் (Brown Nude)

சியர் அல்லது பாம் (Lip Balm) போன்ற உணர்வைக் கொடுத்து, உதடுகளுக்கு முறையான வடிவம் மற்றும் தோற்றத்தைத் தரும்.

Trending lipstick shades | AI image

​6. கோரல் (Coral)

ஆரஞ்சு மற்றும் பிங்க் கலந்த கலவை. கோடைக்காலக் கல்லூரிக் நாட்களுக்கும், சுறுசுறுப்பான தோற்றத்திற்கும் இந்த ஷேட் மிகச் சிறந்தது.

Trending lipstick shades | AI image

​7. டின்டெட் லிப் பாம் (Tinted Lip Balm / Berry Balm)

லிப்ஸ்டிக் பயன்பாடு பிடிக்காதவர்கள் அல்லது உதடுகள் வறண்டு போகாமல் இருக்க விரும்புபவர்கள் இதைப் பயன்படுத்தலாம். இது உதடுகளுக்கு லேசான நிறத்தையும் ஈரப்பதத்தையும் தரும்.

Trending lipstick shades | AI image

8. வுடி பிரவுன் (Woody Brown / Warm Nude)

மிக அடர்த்தியான சாக்லேட் நிறம் இல்லாமல், முகத்திற்கு இயற்கையான மென்மையான பழுப்பு நிறத்தைக் கொடுக்கும்.

Trending lipstick shades | AI image

9. ராஸ்பெரி / பெர்ரி (Raspberry / Berry Tint)

கல்லூரிக் காலக் கொண்டாட்டங்கள், ஃபங்ஷன்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு உதடுகள் சற்று பளிச்சென்று தெரிய இந்த ஷேட் உதவியாக இருக்கும்.

Trending lipstick shades | AI image

10. கிளியர் க்ளாஸ் / ஷீர் பிங்க் (Clear Gloss / Sheer Pink Gloss)

லிப்ஸ்டிக் மீது தடவ தனியாகப் பயன்படுத்த ஏற்றது. உதடுகளுக்கு பளபளப்பான மற்றும் இயற்கையான மினுமினுப்பைத் தரும்.

Trending lipstick shades | AI image
Trending earring designs | AI image
ஒரே பார்வையில் மயங்க வைக்கும்... லேட்டஸ்ட் டாப் 10 கம்மல் டிசைன்ஸ்!