நான்சி மலர்
Asian bleeding heart என்னும் மலர் பார்ப்பதற்கு இயற்கையாகவே இதயத்தில் இருந்து ரத்தம் வழிவது போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். இந்த மலர் சோகமான காதலின் சின்னமாக கருதப்படுகிறது.
Corpse flower என்னும் மலர் மலரும் போது அழுகிய இறைச்சியின் வாசனையை பரப்பும். இது இந்தோனேசியாவின் மழைக்காடுகளில் காணப்படுகிறது. இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 2-3 நாட்களுக்கு மட்டுமே பூக்கும்.
Dolls eyes flowerல் உள்ள பெர்ரி பழங்கள் பார்ப்பதற்கு கண்களை போலவே இருக்கும். வெள்ளை பெர்ரியில் கருப்பு புள்ளிகளை கொண்டிருக்கும் இந்த பழங்கள் கண்களை போல உள்ளதால் அங்குள்ள மக்களால் காடுகளை கண்காணித்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
Monkey orchid மலர் பார்ப்பதற்கு குரங்கு முகத்தை கொண்டிருக்கும். இந்த மலர் மலரும் போது ஆரஞ்சு பழ வாசனையை வெளிப்படுத்தும். இது உலகிலே மிகவும் அரிதான மலராக கருதப்படுகிறது.
Ghost orchid மலர் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு இலைகள் இல்லாததால் இந்த மலர் மலரும் சமயத்தில் மிதப்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்.
Bird of paradise மலர் பார்ப்பதற்கு வண்ணமயமாகவும், பறவையை போன்ற உருவத்தை கொண்டிருக்கும். பவைகள் கவரப்பட்டு மகரந்தச் சேர்க்கை நடக்க இது உதவுகிறது.
பாம்பு படமெடுத்து கொத்துவதற்கு தயாராக இருப்பது போல தோற்றமளிக்கும் cobra lily flower லில்லி குடும்பத்தை சேர்ந்ததல்ல. இந்த மலர் மலர்ந்தால் மழைக்காலம் தொடங்கிவிட்டதாக அர்த்தமாம்.
Middlemist red flower மிகவும் அரிதான மலராக கருதப்படுகிறது. உலகிலேயே லண்டன் மற்றும் நியூசிலேந்த் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இந்த மலர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Youtan poluo மிகவும் சிறிய வெள்ளை மலராகும். புத்த புராணத்தின்படி, இந்த மலர் 3000 வருடத்திற்கு ஒருமுறை தான் மலரும் என்று சொல்லப்படுகிறது.
Hot lips flower பார்ப்பதற்கு சிவந்த உதடுகளை போலவே தோற்றமளிக்கும். இது தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு நிறமாறக்கூடியது.