கிரி கணபதி
இந்தியாவின் அடர்ந்த காடுகளில் வாழும் மலை அணில்கள் உலகின் மிகப்பெரிய அணில் இனங்களில் ஒன்றாகும். வண்ணமயமான இந்த உயிரினத்தின் வியக்கத்தக்க சிறப்புகளை பார்க்கலாம் வாங்க.
1. சாதாரண அணில்களை விட இவை மிகப்பெரியவை. வாலுடன் சேர்த்து சுமார் மூன்று அடி நீளம் வரை வளரும்.
2. ஊதா, பழுப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் இவற்றின் ரோமம் மின்னும். எனவே காடுகளின் வானவில் எனப் போற்றப்படுகின்றன.
3. உடலை விட நீளமான, அடர்த்தியான வால் இவற்றுக்கு உண்டு. மரக்கிளைகளில் தாவும்போது சமநிலையைக் காக்க இது உதவுகிறது.
4. ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு இருபது அடி தூரம் வரை தாவும். ஆபத்து நேரங்களில் வேகமாகத் தப்பிக்க முடியும்.
5. இவை எப்போதும் உயரமான மரங்களின் உச்சியிலேயே வாழும். தரைக்கு இறங்கி வருவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
6. இலைகள் மற்றும் குச்சிகளைக் கொண்டு பல கூடுகளைக் கட்டும். ஓய்வெடுக்கவும் குட்டிகளைப் பாதுகாக்கவும் வெவ்வேறு கூடுகளைப் பயன்படுத்துகின்றன.
7. பழங்கள், விதைகள், பூக்கள் மற்றும் மரப்பட்டைகளை விரும்பி உண்ணும். சில சமயங்களில் பூச்சிகளையும் உணவாக எடுத்துக் கொள்ளும்.
8. மகாராஷ்டிரா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில விலங்கு இது. அங்கு 'ஷேக்ரு' என்ற அழகிய பெயரால் அழைக்கப்படுகிறது.
9. பெரும்பாலும் தனிமையிலேயே வாழும் கூச்ச சுபாவம் கொண்டவை. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கும்.
10. பழங்களை உண்டு விதைகளைப் பல இடங்களில் பரப்புகின்றன. இதனால் காடுகளின் பசுமை தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது.
இயற்கையின் வண்ணமயமான படைப்பான மலை அணில்கள் காடுகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.