வெறும் 100 கிராம் எடையுள்ள சிறிய குரங்கு பற்றிய ஷாக்கிங் உண்மைகள்!

கிரி கணபதி

பிக்மி மார்மோசெட் (Pygmy Marmoset) உலகின் மிகச் சிறிய குரங்கு இனம். இவற்றின் வியக்கத்தக்க பல தகவல்களைப் பார்ப்போம்.

Pygmy Marmoset

1. இது உலகின் மிகச் சிறிய குரங்கு. இதன் எடை சுமார் 100 கிராம் மட்டுமே.

Pygmy Marmoset

2. இதன் உருவம் மனிதனின் கை விரல் அளவே இருக்கும். இதனை விரல் குரங்கு என்றும் அழைப்பார்கள்.

Pygmy Marmoset

3. இவை தென் அமெரிக்க மழைக்காடுகளில் அதிகம் வாழ்கின்றன. மரக் கிளைகளில் வேகமாகத் தாவும் திறன் கொண்டவை.

Pygmy Marmoset

4. இவற்றின் முக்கிய உணவு மரங்களின் பிசின் ஆகும். பூச்சிகள் மற்றும் பழங்களையும் இவை விரும்பி உண்ணும்.

Pygmy Marmoset

5. இந்த குரங்குகளின் வால் உடலை விட நீளமானது. இது மரங்களில் சமநிலையைப் பேண உதவுகிறது.

Pygmy Marmoset

6. இவை தங்கள் தலையை 180 டிகிரி திருப்பக்கூடியவை. இதனால் ஆபத்துகளை எளிதில் கண்டறிய முடியும்.

Pygmy Marmoset

7. பிக்மி மார்மோசெட்கள் எப்போதுமே கூட்டமாகவே வாழும். ஒரு கூட்டத்தில் ஒன்பது குரங்குகள் வரை இணைந்து இருக்கும்.

Pygmy Marmoset

8. இக்குரங்குகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை எழுப்பும் ஒலி பறவைகளின் சத்தம்போல் இருக்கும்.

Pygmy Marmoset

9. இவற்றின் பற்கள் மிகவும் கூர்மையாக இருக்கும். மரப்பட்டைகளைக் கடித்துத் துளையிட இவை பயன்படுகின்றன.

Pygmy Marmoset

10. இவை 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும். காடுகளில் இவற்றின் ஆயுட்காலம் சற்று குறைவாக இருக்கும்.

Pygmy Marmoset
Water Vastu Tips
வீட்டில் அதிர்ஷ்டம் பெருக தண்ணீர் எந்தப் பக்கமா பாயணும் தெரியுமா?