உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பற்றி சில தகவல்கள்!

வாசுதேவன்

இந்த பாலைவனத்தில் டயனோசரஸ்கள் வலம் வந்ததற்கு சாட்சியாக சாத்திய கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்பு 80 மில்லியன் ஆண்டுகள் பழமையான
டைனோசரின் புதை படிவ எச்சங்கள் கண்டு எடுக்கப்பட்டன. அதன் நீளம் 33 அடியும், எடை 5.5 டன்னும் இருந்தனவாம்.

Sahara Desert | Imge Credit: Pinterest

பல லட்சக்கணக்கான வருடங்களுக்கு மேலாகவே இந்த பாலைவனம் இருந்து வந்துள்ளது. இங்கு மணலை விட பாறைகள் அதிகம்.

Sahara Desert | Imge Credit: Pinterest

மணல் திட்டுக்கள், மலைகள், எரிமலைகள் இந்த சஹாராவில் அடங்கும்.

Sahara Desert | Imge Credit: Pinterest

குளிர் பிரதேச ஆர்ட்டிக், ஆண்டார்டிக்கை தவிர்த்து, வெப்பம் மிகுந்த பகுதியில் நம்பர் 1 பாலைவனம் இது. மொத்தம் 11 தேசங்களின் ஊடே பரவி வியாபித்துள்ளது.

Sahara Desert | Imge Credit: Pinterest

மிக அதிகமாக வட ஆப்பிரிக்காவை ஆக்கிரமித்துள்ள சஹாரா பாலைவனம், விரிந்திருக்கும் மற்ற தேசங்கள் மோரோக்கோ, அல்ஜிரியா, சாட், எகிப்த், லிபியா, மாலி, மௌரிட்டனியா, நிஹார், மேற்கு சஹாரா, சுடான் மற்றும் யூனிசியா ஆகும்.

Sahara Desert | Imge Credit: Pinterest

3.6 மில்லியன் சதுர மையில்கள் பரப்பளவைக் கொண்டது. இந்த பாலைவனம் சீனா, அமெரிக்கா போன்று பெரியது. அதிக அளவில் பகலில் வெப்பமும், இரவில் குளிரும் இருக்கும்.

Sahara Desert | Imge Credit: Pinterest

இங்கு வசிப்பவர்கள் பெஃபௌன் நாடோடிகள் (Befouin nomads) என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஒட்டகங்கள் மீது அமர்ந்து இடம் விட்டு இடம் செல்கிறார்கள்.

Sahara Desert | Imge Credit: Pinterest

ஒட்டகங்கள் தவிர ராட்சஸ பல்லிகள், நரிகள், விஷம் மிக்க பாம்புகள், தேள்கள், விண்மீன் விலங்குகள் (Gazelle animal) இவைகளும் இந்த பாலை வனப் பகுதிகளில் காணப் படுபவை.

Sahara Desert | Imge Credit: Pinterest

அகடேஸ் என்ற இடம் மத்திய பகுதியாக கருதப்படுகின்றது. இங்கு இருக்கும் சந்தையில் பல வகை பொருட்கள் கிடைக்கின்றன. பலர் நீளமான கத்திகளை எடுத்து செல்வதை கவுரமாக கருதுகின்றனர்.

Sahara Desert | Imge Credit: Pinterest

டிமியா (Timia) என்ற இடத்தில் ஒட்டகங்கள் மேல் அமர்ந்து நடைப் பெரும் ரேஸ்கள் புகழ் பெற்றவை. ரேஸில் வெற்றி பெருபவருக்கு பட்டா கத்தி பரிசாக வழங்கப் படுகின்றது.

Timia in Sahara Desert | Imge Creator: Picasa

3,415 மீட்டர் உயரம் உள்ள எரிமலை இந்த பாலைவனத்தில் உள்ளது. எமி கௌச்சி (EMI KOUSSI VOLCANO) என்று பெயர்.

Sahara Desert | Imge Credit: Pinterest

அல்ஜிரியா தேசத்தின் கிட்டத்தட்ட 90% சஹாரா பாலைவனம் ஆக்கிரமித்து இருக்கின்றது. கிட்டத்தட்ட 20 ஏரிகளும் உள்ளன.

Sahara Desert | Imge Credit: Pinterest

உயரமான மணல் திட்டுக்கள் (sand dunes) பல இடங்களில் காணப்படும். சில 450 மீட்டர் உயரம் கூட இருக்கும்.

Sahara Desert | Imge Credit: Pinterest

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சில பகுதிகளில் மிக பெரிய ஏரிகள், பசுமை நிறைந்த காடுகள் இருந்தன. காலப் போக்கில் அழிந்தும், மறைந்தும் விட்டன.

Sahara Desert | Imge Credit: Pinterest
Ostrich | Imge Credit: Pinterest
நெருப்புக் கோழியின் சில சுவாரஸ்ய தகவல்கள்!