வாசுதேவன்
நமது நாட்டில் 70 க்கும் அதிகமான மிருக காட்சி சாலைகள் உள்ளன. அவற்றைப் பற்றி சில சுவரசியமான தகவல்கள்.
பல்வேறு மிருக காட்சி சாலைகளில் பல வகையான மிருகங்கள், பறவைகள், பாம்புகள், மீன்கள் போன்றவற்றை கண்டு களிக்கலாம்.
1959ல் துவங்கப்பட்ட கவுஹத்தி (Guwahati) மிருக காட்சி சாலையில் புகழ் பெற்ற ஒற்றை கொம்பு காண்டா மிருகங்கள் இருக்கின்றன.
1876 முதல் இயங்கி வரும் கொல்கத்தாவின் அலிப்பூர் (Alipur) மிருக காட்சி சாலையில் 250 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்த ஆமை பார்வையாளர்களை கவர்ந்து இழுத்து வந்தது. இந்த ஆமை 2006 ஆம் ஆண்டு மறைந்து விட்டது.
டார்ஜிலிங்கில் உள்ள பத்மஜா நாயுடு இமாலயன் (padmaja naidu Himalayan) மிருக காட்சி சாலையில் பனிச்சிறுத்தைகள் (Snow Leopard ) அதிகம் உள்ளன.
கொரக்பூர் மிருக காட்சி சாலை காட்டின் உள் பகுதியில் இருக்கின்றது. இயற்கை சூழ்நிலையில் இங்கு மிக அழகான நீர் வாழ் காட்சி சாலை உள்ளது. (aquarium)
ஒடிசாவின் புகழ் பெற்ற நந்தன்கணன் மிருக காட்சி சாலையில் (nandankanan national park) வெள்ளை புலிகள் பார்வையாளர்களை கவருகின்றன. இவைகள் இனப் பெருக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மிருக காட்சி சாலையில் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்றவை இருக்கின்றன. வருடந்தோறும் 4 மில்லியன் பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிருககாட்சி சாலையில் பல வகையான மயில்கள், வண்ண வண்ண பறவைகள் காணலாம். சில வருடங்களுக்கு முன்பு வரை இங்கு வாழ்ந்த பாலாஜி என்ற மிக பெரிய சிறுத்தை 143 கிலோ எடை இருந்ததாம். சிறுத்தைகள் எடை 70 கிலோ தான் இருக்குமாம்.
பெங்களூரின் பண்ணீர்கட்டா மிருக காட்சி சாலையில் பல வகை மிருகங்கள், பறவைகள் உள்ளன. சிங்கங்கள், புலிகள், கரடிகள் போன்றவைகளுக்கு சபாரி வசதி உண்டு. இங்கு இருக்கும் வண்ணத்தப் பூச்சிகள் பூங்காவில் பல வகை வண்ணத்துப் பூச்சிகள் மயங்க வைக்கும்.
ஹரியானவில் குருஷேத்ரா பகுதியில் உள்ள பிப்லி மிருக காட்சி சாலையில் ஆசிய சிங்கம், கருப்பு வகை மான் (Blackbuck) கழதை புலி, பல வகை மான்கள், ஓநாய் போன்ற மிருகங்களை காணலாம்.
லக்னோவில் உள்ள மிருக காட்சி சாலை 1921 ல் துவக்கப் பட்டது. இங்கு பல வகை, வண்ண மயில்கள் உள்ளன. அரிய வகை குரைக்கும் மான்கள் (barking deer) பெரிய வகை அணில்கள், ஐரோபிய நீர் நாய்கள் இவற்றையும் கண்டு களிக்கலாம்.
ராஞ்சி மிருக காட்சி சாலையில் மிருகங்களுக்கு சிகிக்சை அளிக்க 24 மணி நேர மருத்துவ குழு வசதி உள்ளது.
1977 முதல் இயங்கி வரும் விசாகப்பட்டினம் மிருக காட்சி சாலையில் பல்வேறு மிருகங்கள் இருக்கின்றன. பறவை இனங்களும் பார்வையாளர்களை வரவேற்கின்றன.
கடல் மட்டத்திலிருந்து 6900 அடி உயரத்தில் நைனிடாலில் உள்ளது ஜி பி பந்த் மிருக காட்சி சாலை. இங்கு பல காணக் கிடைக்காத வண்ண கிளிகள், பறவைகள் உள்ளன பார்வையாளர்களை மகிழ்விக்க.
பல வகை மிருகங்களைக்கு கொண்ட கான்பூர் மிருக காட்சி சாலையில் உள்ள ஏரிகள், பல்வகை மரங்கள் சுற்றுப் புறத்தை ரம்மியமாக காட்சி அளிக்க பெரிதும் உதவுகின்றன.