ஜெயகாந்தி மகாதேவன்
Dakos Salad: கிரீஸில் பிரபலமான இந்த சாலட், உலர்ந்த பார்லி ரஸ்க்கை அடிப்படையாக வைத்து அதன் மீது உதிர்த்த மைஸித்ரா சீஸ், பழுத்த தக்காளிப்பழத் துண்டுகள், ஆலிவ்ஸ், கேப்பர்ஸ் (capers), ஃப்ரஷ் ஒரகானோ ஆகியவற்றை தாராளமாகத் தூவி அவற்றின் மீது தரமான ஆலிவ் ஆயிலைத் தெளித்து தயாரிக்கப்படும் சாலட்.
Horiatiki Salad: கிரீக் சாலட் எனவும் அழைக்கப்படும் இந்த சாலட் கிராமங்களில் பிரபலமானது. இதில் தக்காளி, வெள்ளரி, ரெட் ஆனியன், க்ரீன் பெல் பெப்பர், ஆலிவ்ஸ் போன்றவற்றுடன் ஒரு பெரிய ஸ்லைஸ் ஃபெட்டா (Feta) சீஸ் சேர்த்துக் கலந்து அதன் மீது ஆலிவ் ஆயில் தெளித்து ஒரகானோ தூவப்பட்டிருக்கும்.
Houria Salad: சுலபமாக செய்யக்கூடிய துனீசியன் சாலட் இது. வேக வைத்து சிறிது மசித்த கேரட் மீது, சுவைக்காக, பூண்டு, வினிகர், ஆலிவ் ஆயில், ஹரிஸ்ஸா (Harissa) மற்றும் காராவே (Caraway) சீட்ஸ் சேர்க்கப்பட்டு, வேக வைத்த முட்டை மற்றும் ஆலிவ்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
Caprese Salad: தரமான இந்த இத்தாலியன் சாலட், கேப்ரி (Capri) என்ற தீவை பிறப்பிடமாகக் கொண்டது. பழுத்த தக்காளிப் பழத் துண்டுகளுடன் கிரீமி மொஸ்ஸரெல்லா சீஸ் மற்றும் ஃபிரஷ் பசில் (Basil) இலைகள் கலந்து மேற்பரப்பில் ஆலிவ் ஆயில் தெளிக்கப்பட்டிருக்கும்.
Fattoush Salad: பார்த்தவுடன் உண்ணத் தூண்டும் இந்த லெபனீஸ் பிரட் சாலட்டில், லெட்டூஸ், ரேடிஷ், செர்ரி தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் சேர்க்கப்பட்டு, மேற் பரப்பில் டோஸ்ட் செய்த பிட்டா (Pita) பிரட் துண்டுகள் வைக்கப்பட்டிருக்கும்.
Shopska Salad: கோடை காலத்திற்கேற்ற குளிர்ச்சியான சாலட் இது. இதில் நறுக்கிய தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் ரோஸ்டட் பெப்பர் சேர்க்கப்பட்டிருக்கும். மேற்பரப்பில் துருவிய சிரீன் (Sirene) சீஸ் தூவி சன்ஃபிளவர் ஆயில் தெளிக்கப்பட்டிருக்கும்.
Pecel Salad: இந்தோனேஷியாவில் பிரசித்தி பெற்ற இந்த சாலட்டில் ஆவியில் வேகவைத்த பச்சை இலைக்காய்கறிகள், முளை கட்டிய பீன்ஸ், லாங் பீன்ஸ் போன்றவை சேர்ந்திருக்கும். மேலே தரமான, இனிப்பு சுவை கொண்ட பீ நட் பட்டரினால் ட்ரெஸ்ஸிங் செய்யப்பட்டிருக்கும்.
Pai Huang Gua Salad: சீனர்களுக்குப் பிடித்தமான உணவு. சுவை மிக்கது. சுவையூட்டிகளை நன்கு உள்ளிழுக்கும் வகையில் வெள்ளரிக்காய்களை நன்கு நசுக்கி அதனுடன் பூண்டு, நல்லெண்ணெய், பிளாக் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
Piyas Salad: துருக்கியர்களின் பாரம்பரிய உணவு இது. வெள்ளை பீன்ஸ், வெங்காயம், பார்ஸ்லே, வினிகர், ஆலிவ் ஆயில் போன்றவற்றுடன் சில நேரங்களில் வேக வைத்த முட்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு ப்ரோட்டீன் சத்து நிறைந்த சிறப்பான உணவு இந்த சாலட்.
Mechouia Salad: நார்த் ஆப்பிரிக்க மக்களின் தனித்துவமான உணவு. பொடியாக நறுக்கி, கிரில் செய்யப்பட்ட வெங்காயம், பெப்பர்ஸ், பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றை கலந்து செய்யப்படுகிறது இந்த சாலட். உப்பு, ஆலிவ் ஆயில், பிளாக் பெப்பர் மற்றும் காராவே விதைகளால் சீசனிங் செய்து, வேகவைத்த முட்டை அல்லது தூனா ஃபிஷ் துண்டுகளால் அலங்கரிக்கப்படுகிறது.
(நன்றி: firstpost.com)