கலைமதி சிவகுரு
இந்திய தேசம் மாம்பழங்களின் 'ராஜா' என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வகை மாம்பழத்திற்கும் தனி சுவை, வடிவம், மற்றும் நிறம் உள்ளது. அந்த வகைகளைப் பற்றி பார்க்கலாம்.
பாதாமி: கர்நாடகாவின் முன்னணி மாம்பழ வகை. இது ஏப்ரல் முதல் ஜூலை வரை கிடைக்கும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த வகை மிகவும் மெல்லிய தோல் கொண்டது. பாதாமி கர்நாடக மாநிலத்தின் அல்போன்சா என்று பிரபலமாக அறியப்படுகிறது.
பாதாமி கர்நாடக மாநிலத்தின் அல்போன்சா என்று அறியப்படுகிறது. தோல் சிவப்பு நிறத்துடனும், பிரகாசமான தங்க மஞ்சள் நிறத்தையும் கொண்டுள்ளது.
தோதாபுரி: லேசான சுவை மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். இந்த வகை கிளியின் மூக்கு போல் காட்சியளிக்கும். கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த இந்த வகைக்கு இனிப்பு இருக்காது. ஆனால் சாலட் மற்றும் ஊறுகாய்களுக்கு சிறந்தது.
அடையாளம்: பழுத்தவுடன் பச்சை நிறத்தில் கிளி மூக்கு போல் இருக்கும்.
கேசர்: மிகவும் விலையுயர்ந்த வகைகளில் ஒன்றாக இருப்பதால் கூழின் நிறம் குங்குமப்பூவை ஒத்திருக்கிறது. இது அகமதாபாத் மற்றும் குஜராத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இந்த வகை முதல் முதலில் 1931 இல் ஜூனகர் நவாப்களால் பயிரிடப்பட்டது.
அடையாளம்: இது கேசர் (குங்குமப்பூ) போல வாசனை வீசுவது தனித்துவமான அம்சமாகும்.
ஹாபஸ்: மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட இந்த வகை இப்போது குஜராத் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. உலகில் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் மிகவும் விலை உயர்ந்த வகை இதுவாகும்.
அடையாளம்: இது இயற்கையான தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது. சதை குங்குமப்பூ நிறத்தில் உள்ளது. மற்றும் நார்ச்சத்து இருக்காது.
பங்கனப்பள்ளி: இந்த மாம்பழம் ஆந்திரபிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பங்கனப்பள்ளியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இனிமையான நறுமணத்துடன், ஓவல் வடிவத்தில் மென்மையான தோலுடன் காணப்படும்.
அடையாளம்: ஓவல் வடிவத்தில், வெளிர் மஞ்சள் நிறத்துடன் சில புள்ளிகளுடன் இருக்கும்.
ரத்னகிரி (அல்போன்சா) : ரத்னகிரி, தேவ்கர், ராய்காட் மற்றும் கொங்கன் ஆகிய மகாராஷ்டிரா பகுதிகளில் காணப்படும். ஒவ்வொரு மாம்பழமும் 150 முதல் 300 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கிறது. அல்போன்சா இந்தியாவில் காணப்படும் விலையுயர்ந்த சிறந்த மாம்பழங்களில் ஒன்றாகும்.
அடையாளம்: பழத்தின் மேல் காணப்படும் சிவப்பு நிறத்தின் மூலம் இந்த வகையை கண்டறியலாம்.
சௌன்சா: வட இந்தியா மற்றும் பீகாரில் பிரபலமான இந்த வகை பதினாறாம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரியின் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. பீகாரில் உள்ள ஒரு நகரத்தின் பெயரால் பெயரிடப்பட்டது. மேலும் இனிப்பு சுவை மிகுந்த கூழ் அதிகமாக இருக்கும்.
அடையாளம்: பிரகாசமான மஞ்சள் தங்க நிறத்தால் வகை படுத்தப்படுகிறது.
ராஸ்பூரி: கர்நாடகாவின் பழைய மைசூரில் அதிகம் வளர்க்கப்பட்டு நுகரப்படும் இந்த வகை, மாம்பழங்களின் ராணி என்று இந்தியாவில் அழைக்கப்படுகிறது. இது மே மாதத்தில் இருந்து ஜூன் இறுதி வரை கிடைக்கும்.
அடையாளம்: ஓவல் வடிவத்தில் 4 முதல் 6 அங்குலம் நீளம் கொண்டவை.
பைரி: சந்தைககளுக்கு வரும் முதல் வகைகளில் ஒன்றாகும். தோல் சிவப்பு நிறமும், புளிப்புச் சுவையும் கொண்டது. குஜராத்தில் ஆம்ராஸ் தயாரிக்கப் பயன்படுகிறது.
அடையாளம்: அதிக நார்ச்சத்து மற்றும் ஜூஸ் கொண்டது. சிவப்பு நிறத்தில் இருக்கும்.