கிச்சன் வேலை பாதியா குறையும்... இது அம்மாக்கு கூட தெரியாத சமையல் ஹேக்ஸ்!

சி.ஆர்.ஹரிஹரன்

Cooking tips

1. கீரை சப்பாத்தி (Keerai Chapathi): மீந்த கீரை மசியலை கோதுமை மாவில் பிசைந்து சுவையான சப்பாத்தி செய்யலாம்.

Cooking tips | Gemini image

2. ரசத்தில் தக்காளி சாஸ் (Tomato Sauce in Rasam): காலி தக்காளி சாஸ் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி ரசத்தில் சேர்த்தால் சுவை கூடும்.

Cooking tips | Gemini image

3. இரண்டு வாழைப்பழம், சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் கலந்து ஏதாவது ஒரு எஸ்ஸன்ஸ் ஊற்றினால் பாயசம் சுவையாக இருக்கும்.

Cooking tips | Gemini image

4. பிரட் வடை (Bread Vadai): காய்ந்த பிரட் அல்லது பன்னை நனைத்துப் பிசைந்து, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடையாகப் பொரிக்கலாம்.

Cooking tips | Gemini image

5. கத்திரிக்காய் நிறம் மாறாமல் (Prevent Brinjal Discoloration): கத்திரிக்காய் சமைக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

Cooking tips | Gemini image

6. உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது சிறிது அரிசிமாவு தூவினால் வறுவல் மொறுமொறுப்பு மிகுந்து இருக்கும்.

Cooking tips | Gemini image

7. முட்டைக்கோஸ் பஜ்ஜி (Cabbage Bajji): முட்டைக்கோஸின் கனமான மேல் இலைகளைக் கடலை மாவில் தோய்த்துப் பஜ்ஜி செய்யலாம்.

Cooking tips | Gemini image

8. தயிர்பச்சடி செய்யும்போது தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் பச்சடியின் வாசனையே அலாதி தான்.

Cooking tips | Gemini image

9. அப்பளம் பொரிக்கும்போது எண்ணெயில் ஒரு சிறிய துண்டு புளியை போட்டு வைத்தால் அப்பளம் அதிகமாக எண்ணைய் குடிக்காது.

Cooking tips | Gemini image

10. புழுங்கல் அரிசி தட்டை (Parboiled Rice Thattai): பச்சரிசிக்குப் பதில் புழுங்கல் அரிசி பயன்படுத்தினால் தட்டை கூடுதல் சுவையுடனும் கரகரப்பாகவும் இருக்கும்.

Cooking tips | Gemini image
Karupatti payasam | Gemini image
பால் திரியாம கருப்பட்டி பாயசம் செய்ய இந்த ஒரு ரகசியம் போதும்!