புவனா நாகராஜன்
சூடான சாம்பார் மற்றும் ரசம் போன்றவை பரிமாறுவதற்கு முன் ஒரு ஸ்பூன் நெய்யை விட்டால் சுவையும் மனமும் கூடும்.
சீடை முறுக்கு தயார் செய்யும்போது, வானலியில் எண்ணைய் காயும்போது கொஞ்சம் கொய்யா இலையை போடவும். முறுக்கு சீடை வெடிக்காது.
ரவா உப்புமா செய்வதற்கு முன் ரவையை நன்கு வாசனை வரும்வரை வறுக்க வேண்டும். அப்போதுதான் ரவா உப்புமா ஒட்டாமல் வரும்.
சாம்பாா் வைப்பதற்கு பருப்பை ஊறப்போட்டு நீண்ட நேரம் வேக வைக்கக்கூடாது. அவ்வாறு செய்யும்போது குழம்பு கூழ்போல ஆகிவிடும்.
உப்புமா கிளறி இறக்கியதும் ஒரு சில்வர் கப்பில் நெய்தடவி கொட்டி வைக்கவும். அப்படி செய்தால் பரிமாறும்பொது கவிழ்த்துக்கொட்டினால் ஒட்டாமல் வரும்.
அவல் உப்புமா செய்யும்போது அவலை பதினைந்து நிமிடம் வெந்நீாில் ஊறவைத்து நன்கு வடிகட்டி உலர்ந்த பிறகு செய்தால் உப்புமா நன்கு மிருதுவாக வரும்.
மீந்து போன இட்லி மாவுடன், ரவை, வெங்காயம், பச்சைமிளகாய் ,உப்பு, சோ்த்து ஊத்தப்பமாக வாா்க்கலாம். தேங்காய்துருவல் சோ்த்தால் சுவை கூடும்.
தோசைமாவு அரைக்க புழுங்கல் அரிசியோடு கொஞ்சம் வெந்தயம், கொள்ளு ,சோ்த்து அறைக்க வாசனையுடன் ஆரோக்கியமான தோசை வாா்க்கலாம். உடல் உஷ்ணம் தணியும், வாய்வுத்தொல்லை வராது!
அரிசி தோசை தயாரிக்கும் போது அரிசிமாவில் பொடிப்பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, மற்றும் பாலக்கீரையை சோ்த்து சிட்டிகை ஆப்ப சோடா கலந்து தோசை வாா்க்கலாம். தோசை சுவையாக இருக்கும்.
வடைக்கு பருப்பை நீண்ட நேரம் ஊறவைக்கக்கூடாது. அப்படி ஊறவைத்து அரைத்த மாவால் தட்டும் வடை அதிக எண்ணையைக் குடிக்கும்.