வாசுதேவன்
1868 ல் நோபின் சந்திர தாஸ் என்பவரால் தயார் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது ரசகுல்லா.
இவர் சமையல் கலையில் கைத்தேர்ந்த வித்தகராக திகழ்ந்தவர். இவர் தயாரித்த சுவை மிக்க இனிப்பிற்கு இவர் வைத்த பெயர் ரசகுல்லா.
'Roso' ஜூஸ் 'Golla' உருண்டை பந்து 'Rosogolla' என்று பெயர் வைத்தார்.
இது திரிந்த பால் மற்றும் சர்க்கரை பாகுவை பதமாக சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப் படுவது. துளியும் தண்ணீர் கலக்காத இனிப்பு வகை ஆகும்.
அதன் தனி பட்ட சுவை சுண்டி இழுக்க அன்றைய கல்கத்தா வாசிகள் அடிமை ஆகினர் ரசகுல்லாகளுக்கு. விரைவில் பிரபலம் அடைய, ரசகுல்லா கல்கத்தாவின் அங்கம் ஆயிற்று என்றால் மிகையாகாது.
நோபின் சந்திர தாஸ்க்கு அடுத்து அவரது மகன் க்ருஷ்ண சந்திர தாஸ் மேலும் ரசகுல்லாக்களை பிரபலப் படுத்தினார். வியாபாரத்தை புது டெக்கினிக்கள் மூலம் விரிவடைய செய்ய முயற்சிகள் மேற் கொண்டார்.
இவரது முயற்சியால் இந்தியாவில் முதன் முதலில் ரசகுல்லா போன்ற இனிப்பு வகைகள் டின்னில் பாக் செய்து விற்பனை செய்யும் முறை அறிமுகப் படுத்தப் பட்டது.
கே சி தாஸ் நிறுவனம் இன்று கொல்கத்தாவில் பிரபலமான ஒன்று ஆகும். கொல்கத்தா நகரத்தின் பல இடங்களை தவிர இந்தியாவின் பல நகரங்களிலும் கிளைகள் உள்ளன.
வெள்ளை நிறம் தவிர ஆரஞ்சு நிற ரசகுல்லாக்களும் கிடைக்கின்றன. டையாபிடிஸ் இருப்பவர்களுக்கு
(சக்கரை நோய்) பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட
ரசகுல்லாக்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
2020 ல் மேற்கு வங்காளம் தனிப்பட்ட சொந்தக்காரர் ரசகுல்லாக்களுக்கு என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஜிஐ tag (Geographical Indication - GI)
நவம்பர் 14 ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் 'ரசகுல்லா தினமாக' (Rosogolla Day) கொண்டாடப் படுகின்றது .
அவரது மகன் க்ருஷ்ண சந்திர தாஸ் ஒரு படி மேலே போய் 'ரசமலாய்' (Rossomalai) என்ற புதிய வகை இனிப்பை கண்டுபிடித்து, அறிமுகம் செய்து அசத்தினார். ரசகுல்லாவைப் போலவே ரசமலாய்யும் புகழ் பெற்றது ஆகும்.