உணவுகளின் நிறத்தை கூட்ட சில வழிகள்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

கேசரி செய்யும்போது ஆரஞ்சு கேசரி கலரை கொதிக்க வைக்கும் தண்ணீரில் கலந்து பின் ரவை சேர்த்து இறுதியில் குங்குமப்பூ சேர்த்து இறக்க கேசரி கலர் பார்க்கவும், சுவைக்கவும் நன்றாக இருக்கும்.

Kesari

கீரை சேர்த்து செய்யும் எந்த வித சமையலிலும் வேக வைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்து மூடி போடாமல் அடுப்பை சிம்மில் வைத்து சமைக்க கீரையின் பச்சை நிறம் மாறாமல் சுவையாக இருக்கும்.

Keerai

குலோப் ஜாமூன் செய்யும் போது சர்க்கரை பாகில் கேசரி கலர் சிறிது குங்குமப்பூ சேர்த்து பின் ஜாமூனை பொரித்து போட சிவந்த கலரில் நன்றாக இருக்கும்.

Gulab jamun

முட்டைக்கோஸ்,வாழைத்தண்டு போன்றவை நிறம் மாறாமல் இருக்க அதை ஆவியில் வேகவைத்து பின் தாளித்து தேங்காய்த் துருவல் போட்டு இறக்க நிறம் மாறாமல் வெண்மையாக நன்றாக இருக்கும்.

Cabbage

காலிபிளவர், காளான், பன்னீர் செய்யும் போது சிறிது பால் தெளித்து வேக விட நிறம் மாறாமல் ,கறுக்காமல் நன்றாக இருக்கும்.

Cauliflower

உருளை கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது வெந்த கிழங்குடன் காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு கரம் மசாலாத்தூள் போட்டு பிசறி ரோஸ்ட் செய்ய நன்றாக இருக்கும்.

Potato

புளிக்குழம்பு,காரக் குழம்பு தயாரிக்கையில் தாளிப்பு எண்ணையில் காஷ்மீரி மிளகாய்த்தூள்,சாம்பார் பொடி சேர்த்து பின் புளிக்கரைசலை ஊற்றி இறுதியில் வெல்லம் சேர்த்து இறக்க நல்ல கலரில் குழம்பை சுவைக்க அருமையாக இருக்கும்.

Puli kuzhambu

சாதம் வடிக்கும் போது சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் இறக்க நல்ல வெண்மை நிறத்தில் பார்க்க நன்றாக இருக்கும்.

White rice

இட்லி வெண்மையாக இருக்க வெந்தயத்தை குறைத்து உளுந்தை பொங்க ஆட்டி தயாரிக்க மென்மையான, வெண்மையான இட்லியை சுவைக்க நன்றாக இருக்கும்.

Idli

தோசைக்கென தனியாக மாவு அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது துவரம் பருப்பு, வெந்தயம், உளுந்து ஊற விட்டு நைசாக அரைத்து தோசை வார்க்க நல்ல சிவந்த நிறத்தில் ரோஸ்ட் ஆக வரும்.

Dosa

சர்க்கரையை காரமலைஸ் செய்து அதை, பால் கொழுக்கட்டை செய்து இறக்கும்போது சேர்க்க நல்ல கலராகவும் சுவையாகவும் இருக்கும்.

Paal kozhukattai

வடை செய்கையில் துவரம் பருப்பு ஊற வைத்ததை சேர்த்து அரைத்து வடை செய்ய வடை சிவந்து வெளியில் மொறுமொறுப்பாக ,உள்ளே சாஃப்ட் ஆக இருக்கும்.

Vadai
Cooking tips
அவசியமான சமையல் டிப்ஸ்!