மொறுமொறு உளுந்து வடை... எண்ணெய் குடிக்காமல் வர... மாவில் இதை மட்டும் கலந்தால் போதும்!

பத்மப்ரியா

வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது ஒரு துளி எலுமிச்சை சாறு சேர்த்தால் வெண்டைக்காய் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். 

okra fry

கிழங்கு வகைகளை உப்பு கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

potato

கூட்டு, பொரியலுக்கு தேங்காய் பூ இல்லையென்றால், புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து தூவி இறக்கினால், தேங்காய் பூ சேர்த்த சுவை கிடைக்கும்.

Kootu recipe

வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

crispy-vadagam

தயிர் வடை செய்ய உளுந்து ஊற வைக்கும்போது, கூடவே ஐந்தாறு முந்திரிப் பருப்புகளையும் ஊறவைத்து அரையுங்கள். வடைகள் மெத்தென்று இருப்பதுடன், ருசியும் அருமையாக இருக்கும்.

soft-curd-vada

இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொண்டால் இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்.

idiyappam

வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.

orange-peel-kuzhambu

வெண்டைக்காய்ப் பொரியல் செய்யும் போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து , பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

okra-cumin-coconut

தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

store-grated-coconut

தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு பருப்பை சேர்த்து அரைத்து செய்தால் தோசை பூப்போல இருக்கும்.

horsegram-dosa.

உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

no-oil-vada
Evil
'பேய்களின் நேரம்' எது தெரியுமா? 10 மர்மமான உண்மைகள்! கிரி கணபதி