வெயில் காலத்துல இத மட்டும் செஞ்சு வைங்க... அப்புறம் சமையல் வேலை ரொம்ப ஈஸி!

நான்சி மலர்

கோடைகால வெயிலைப் பயன்படுத்தி, வருடம் முழுவதும் கெட்டுப்போகாமல் சுவையைப் தரும் 10 வித்தியாசமான மற்றும் பாரம்பரியமான வத்தல், வடகம் போடும் யோசனைகள்

vadagam

அரிசி கூழ் வடகம்: பச்சரிசி மாவை கஞ்சியாகக் காய்ச்சி, முறுக்கு அச்சில் இட்டோ அல்லது கரண்டியால் ஊற்றியோ செய்யப்படும் கிளாசிக் வடகம்.

arisi vadagam | credit sri varaha foods

ஜவ்வரிசி வடம்: நன்றாக ஊறிய ஜவ்வரிசியை தனியாகவோ அல்லது அரிசி மாவு கூழுடன் சேர்த்தோ வேகவைத்து, சிறு சிறு வில்லைகளாக ஊற்றிச் செய்வது.

javvarisi vadagam | credit viji foods

தக்காளி வடகம்: செயற்கை நிறமிகளைத் தவிர்த்து, கூழ் வடகம் செய்யும்போது தக்காளி விழுதை சேர்த்துக் காய்ச்சலாம்.

tomato vadagam | credits traditionally modern foods

மோர் பாவக்காய் வத்தல்: பெரிய பாவக்காயை மெல்லிய வட்டங்களாக நறுக்கி, புளித்த மோர், உப்பு, மஞ்சள் தூள் கலவையில் இரவு முழுவதும் ஊறவைத்து, பின் வெயிலில் காயவைப்பது.

Bitter Gourd Vathal | credit Woody Works

மோர் மிளகாய்: காரமில்லாத நீள பச்சை மிளகாய்களைக் கீறி, உப்பு கலந்த கெட்டி மோரில் சில நாட்கள் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, மீண்டும் மோரில் ஊறவைத்து எடுக்கும் பாரம்பரிய முறை.

mor milagai | credit essence of life foods

சுண்டக்காய் வத்தல்: பச்சை சுண்டக்காயை லேசாக நசுக்கி அப்படியே மோரில் ஊறவைத்து காயவைப்பது. இவை வயிற்றுப் புண், வாய் புண் மற்றும் குடல் புழுக்களை நீக்கும் சிறந்த மருத்துவக் குணம் கொண்டது.

sundakkai vathal | credit pinterest

கிள்ளு வடகம்: அரிசிமாவுடன் ஓமம், காரத்திற்கு மிளகாய்த்தூள் சேர்த்து, கெட்டியான பதத்தில் பிசைந்து, விரல்களால் சிறு சிறு துண்டுகளாகக் கிள்ளி வைத்து காயவைப்பது.

killu vadam | credit pinterest

வெங்காய வடகம்: சின்ன வெங்காயம், பூண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாகப் பிடித்து வெயிலில் காயவைக்கும் முறை.

vengaya vadam | credit chitra's cookbook

காய்கறி வத்தல்கள்: பிஞ்சு கத்தரிக்காய்களை நான்காகக் கீறியும், கொத்தவரங்காய்களை லேசாக உப்பு நீரில் வேகவைத்தும் வெயிலில் மொறுமொறுவென்று காயவைப்பது.

kothavarangai vathal | credit sri varaha foods

ஜவ்வரிசி அப்பளம்: அரிசி மாவை ஆவியில் வேகவைத்து அப்பளமாக இட்டு காயவைக்கும் வடகாத்து அப்பள முறை. இதில் சீரகம் அல்லது மிளகுத்தூள் சேர்த்துச் செய்யலாம்.

javvarisi appalam | credit sri varaha foods
Snake
தன்னைத் தானே சாப்பிட்டு சாகும் பாம்புகள்... ஏன் இப்படி செய்கின்றன தெரியுமா?