நான்சி மலர்
White truffles இத்தாலியில் பியட்மாண்ட் என்னும் பகுதியில் மட்டுமே வளரக்கூடிய ஒரு அரியவகை காளான். தனித்துவமான வாசனை மற்றும் சுவையைக் கொண்டதால், இது 3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஈரானில் உள்ள அல்பினோ பெலுகா ஸ்டர்ஜன் மீனில் இருந்து எடுக்கப்படும் அல்மாஸ் கேவியர் உலகின் விலையுயர்ந்த உணவுகளில் ஒன்றாகும். இதன் விலை இந்திய மதிப்பில் 20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ரூபி ரோமன்ஸ் திராட்சை ஜப்பானில் இஷிகாவா மாகாணத்தில் வளர்க்கப்படும் திராட்சையாகும். இது தனித்துவமான இனிப்பு சுவையை கொண்டிருப்பதால், சில கொத்துக்கள் 10 லட்சம் வரை விலை போகிறது.
Bluefin tuna மீன்கள் ஜப்பானில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படும் மீன் வகையாகும். இதை Sushi, Sashimi உணவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இதில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு, வைட்டமின் A, D உள்ளது.
ஜப்பானில் உள்ள Hokkaido என்ற இடத்தில் மட்டுமே வளரும் அரியவகை கருப்பு தர்பூசணி தான் Densuke watermelon. இதன் தனித்துவமான வளர்ப்புமுறை காரணமாக விலை அதிகமாக விற்கப்படுகிறது.
கோபி லுவாக் காபி ஜாவா, சுமத்திரா தீவுகளில் இருந்து வருகிறது. Asian palm civet கழிவிலிருந்து சேகரிக்கும் காபி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுவது. இந்த காபி ஒரு கிலோ 2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் காஷ்மீர் பகுதியில் தயாரிக்கப்படும் குங்குமப்பூ ஒரு கிலோ 4.95 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ குங்குமப்பூ தயாரிக்க பல ஆயிரம் பூக்களின் மகரந்தம் தேவைப்படுவதே காரணமாகும்
அபலோன் விலை உயர்ந்த கடல் உணவு வகையில் ஒன்று. இது ஒருவகை கடல் நத்தையாகும். இதன் சுவை இனிப்பு மற்றும் உப்பின் கலவையாக இருக்கும். அபலோன் 100 முதல் 200 டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஜப்பானிய காளான் மாட்சுடேக் அதன் வாசனை மற்றும் சுவைக்கு பெயர் போனது. இந்த காளான் ஒரு கிலோ 1.5 லட்சம் வரை விற்பனையாகிறது.
கோபி மாட்டிறைச்சி ஜப்பான் ஹோன்ஷு தீவின் கோபி பகுதியிலிருக்கும் மிகவும் விலையுயர்ந்த வாக்யு மாட்டிறைச்சி. பளிங்குக் கொழுப்பு கோபி மாட்டிறைச்சியின் தனித்துவமாகும். கோபி மாட்டிறைச்சியின் விலை தோராயமாக 13,000 ஆகும்.