சமையலில் அசத்த பயனுள்ள குறிப்புகள்!

சி.ஆர்.ஹரிஹரன்

சாதத்துக்கு தொட்டுக்கொள்ளும் தேங்காய்த் துவையலில் புளிக்கு பதிலாக மாங்காய் வைத்து அரைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும்.

Coconut chutney | Img credit: AI Image

சாம்பார், வற்றல் குழம்பு போன்றவற்றில் உப்பு (அ) காரம் அதிகமாகிவிட்டால் ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்தால் சரியாகிவிடும்.

Vatha Kuzhambu | Img credit: AI Image

பூரிக்கு மாவு பிசையும்போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்துச் சேர்த்து பூரி செய்தால் பூரியின் சுவையே அலாதி தான்.

Poori dough | Img credit: AI Image

அடைக்கு பருப்பு வகைகள் நனைக்கும் போது, துவரம் பருப்பை முற்றிலும் நீக்கி, பட்டாணிப் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அடை சுவை மிகுந்து இருக்கும்.

Soaked lentils | Img credit: AI Image

தட்டை, முறுக்கு செய்யும்போது தேங்காய்ப்பால் விட்டுச் செய்தால் கரகரப்பும் ருசியும் கூடும்.

Murukku dough and coconut milk | Img credit: AI Image

வெண்ணையில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட கெடாமல் இருக்கும்.

butter | Img credit: AI Image

புளித்த தோசைமாவு இருந்தால், அதில் மூன்று பிடி ஜவ்வரிசியை ஊற வைத்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து சுவையான போண்டா செய்யலாம்.

bonda | Img credit: AI Image

தேங்காய் சாதம் கிளறும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறிப் பாருங்கள். சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

Coconut rice | Img credit: AI Image

பருப்புப்பொடி அரைக்கும்போது ஒரு கரண்டி கொள்ளு சேர்த்து வறுத்து அரைத்தால் பருப்புப்பொடி மிகவும் சுவையாக இருக்கும்.

lentil powder | Img credit: AI Image

கறிவேப்பிலைக் குச்சிகளை தூரப் போடாமல் வெயிலில் காயவைத்து ரசப்பொடியோடு சேர்த்து அரைத்தால் ரசப்பொடி வாசனையாக இருக்கும். ரசமும் சுவையாக இருக்கும்.

lentil powder | Img credit: AI Image

உருளை, சேனை கிழங்கு வைத்துக் கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது பிரட்டை உதிர்த்து கடைசியில் தூவி இறக்க ரோஸ்ட் சுவை அள்ளும்.

potato roast | Img credit: AI Image

வாழைக்காய் வெளியில் வைத்தால் பழுத்து விடும். எனவே, தோல் சீவி நறுக்கி உப்பு, காரம், மஞ்சள்பொடி போட்டுப் பிசறி வைத்தால் ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

Banana | Img credit: AI Image

தேங்காய் சட்னிக்கு புளி சேர்ப்பதற்கு பதிலாக எலுமிச்சைச் சாறைப் பிழிந்தால் சுவையாக இருக்கும்.

coconut chutney | Img credit: AI Image

ஒரு கரண்டி மசித்த கீரையை கெட்டித்தயிரில் கலந்து சுவையான தயிர் பச்சடி செய்யலாம்.

Curd raitha | Img credit: AI Image
cooking ingredients
கைமணக்கும் சமையலுக்கு... இதோ சில கைதேர்ந்த குறிப்புகள்!