சி.ஆர்.ஹரிஹரன்
Vadai tips
1. சூடு ஆறிய பின்னும் மொறுமொறுப்பு: மசால் வடைக்குச் சோடாவுக்குப் பதில் ஒரு டேபிள் ஸ்பூன் ரவை சேர்த்தால் ஆறிய பிறகும் மொறுமொறுப்பாக இருக்கும்.
2. முருங்கை இலை வடை: மெதுவடைக்குக் கருவேப்பிலைக்குப் பதிலாகச் சிறிது முருங்கை இலை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
3. ருசியான தயிர்வடை: தயிர்வடைக்கு உளுத்தம்பருப்பு ஊறவைக்கும்போதே கொஞ்சம் முந்திரிப்பருப்பையும் சேர்த்து அரைத்தால் சுவை கூடும்.
4. புளித்த தயிர் ரவை வடை: புளித்த தயிரில் ஊறிய ரவையுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்துத் தட்டி எடுத்தால் அசத்தலான ரவை வடை தயார்.
5. பிரட் சேர்த்துக் கிரிஸ்பி வடை: உளுந்து மாவு அரைக்கும்போது இரண்டு பிரட் துண்டுகள் சேர்த்தால் வடை கிரிஸ்பியாக வரும்.
6. மிக்ஸியில் ஒட்டாமல் எடுக்க: அரைப்பதற்கு முன் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுந்து சேர்த்தால் மாவை எளிதாக வழித்தெடுக்கலாம்.
7. கரகரப்பான உளுந்து வடை: உளுந்து மாவில் ஊறவைத்த துவரம்பருப்பை ஒரு கைப்பிடி சேர்த்தால் கரகரப்பான சுவை கிடைக்கும்.
8. நீர்த்துப்போன மாவைச் சரிசெய்ய: வடைமாவு நீர்த்துவிட்டால் சிறிது பச்சரிசி மாவு அல்லது கைப்பிடி ரவை சேர்த்து அதிக நீரை உறிஞ்சச் செய்யலாம்.
9. எண்ணெய் குடிக்காமல் இருக்க: பருப்புகளைப் பத்து நிமிடங்கள் ஊறவைத்தாலோ அல்லது உளுந்துடன் இரண்டு டீஸ்பூன் துவரம்பருப்பு சேர்த்தாலோ வடை அதிக எண்ணெய் குடிக்காது.
10. சேமியா / பச்சரிசி: உளுந்து வடை மாவில் சிறிதளவு சேமியாத்தூள் அல்லது பச்சரிசி சேர்த்தால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.