கிரி கணபதி
Ruster Dhow:
உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவகமாக துபாயின் ரூஸ்டர் தோவ் இருக்கிறது. இதில் ஒரே சமயத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் உணவருந்த முடியும். இந்த உணவகத்திலிருந்து துபாயின் அழகிய காட்சியை நாம் ரசிக்க முடியும்.
Sea Palace:
ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட முதல் மிதக்கும் சீன உணவகம்தான் Sea Palace என்ற மிதக்கும் உணவகம். இது ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ளது. இதன் சிறப்பே அதன் வெளிப்புறத் தோற்றம் தான்.
Saigon உணவகம்:
வியட்னாமில் இருக்கும் இந்த உணவகம், மலிவு விலையில் உணவருந்த விரும்புபவர்கள் செல்வதற்கான உணவகங்களுள் முதலிடத்தில் உள்ளது.
Jumbo மிதக்கும் உணவகம்:
ஹாங்காங்கில் உள்ள அபெர்டீன் துறைமுகத்தில் அமைந்துள்ள ஜம்போ மிதக்கும் உணவகம், எந்த ஒரு சுற்றுலாப் பயணியும் தவறவிடக்கூடாத உணவகங்களில் ஒன்றாகும்.
Cloud 9:
கடலில் மிதந்துகொண்டே நீங்கள் உணவருந்த விரும்பினால், Cloud 9 உணவகத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். பிஜியில் மாமனுகா தீவில் இது அமைந்துள்ளது.
Veli Lake மிதக்கும் உணவகம்:
இந்த பதிவில் இருக்கும் டாப் 10 மிதக்கும் உணவகங்களில் இந்தியாவில் இருக்கும் ஒரே உணவகம் இதுதான். அதுவும் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் இருக்கிறது.
Salt & Sill:
இந்த விருது பெற்ற மிதக்கும் கடல் உணவகம் ஸ்வீடனின் தனித்துவமான உணவு வகைகளால் நிரம்பியுள்ளது. ஸ்வீடனின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த உணவகம், பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.
PS Tattershall Castle:
லண்டனில் இருக்கும் இந்த உணவகம் நல்ல வரலாற்றைக் கொண்ட ஒரு கோட்டையாகும். 1934 இல் தனித்துவம் வாய்ந்த கப்பல் உணவகமாக இருந்த இது, லண்டன் கடற்படைக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி ஓய்வு பெற்றதாகும்.
Cat Ba Bay:
வியட்நாமின் முத்து தீவு என அழைக்கப்படும் Cat Ba தீவில் இது அமைந்துள்ளது. இது வழக்கமான மிதக்கும் உணவகம் போலல்லாமல் பல்வேறு படகுகளாலும் நிரம்பியுள்ளது.
BBQ Donut's மிதக்கும் உணவகம்:
ஜெர்மனியில் இருக்கும் பிபிக்யூ டோனட் மிதக்கும் உணவகம். பார்ப்பதற்கு டோனட் வடிவிலான படகு போல இருக்கும். ஒவ்வொரு டோனட் வடிவ படகிலும் பத்து பேர் அமர்ந்து உணவருந்தலாம்.