கிரி கணபதி
வாழ்க்கை ஒரு பயணம், மரணம் அதுல தவிர்க்க முடியாத ஒரு பகுதி. இந்த விஷயத்தைப் பத்தி பேசுறதுக்கு நிறைய பேர் தயங்குவாங்க. ஆனா, மரணம் நெருங்குற அறிகுறிகளைப் புரிஞ்சிக்கிட்டா, மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும், குடும்பத்தினர் தயாராகிக்கலாம், அப்புறம் அமைதியான ஒரு வழியில அவங்க பிரியவும் முடியும்.
1. ரொம்ப டயர்டா இருப்பாங்க. கையைக் கூட தூக்க முடியாத அளவுக்குச் சோர்வா இருப்பாங்க. அதிக நேரம் தூங்குவாங்க, முழிச்சிருக்கற நேரம் ரொம்ப கம்மியாயிடும்.
2. உடம்புக்கு சாப்பாடும் தண்ணியும் தேவைப்படுறது ரொம்பவே குறைஞ்சிடும். சாப்பிட மாட்டாங்க, தண்ணியும் கொஞ்சமாத்தான் குடிப்பாங்க, இல்லாட்டி எதுலேயுமே ஆர்வம் காட்ட மாட்டாங்க.
3. மூச்சு விடுறது சீரற்று போகும். அதாவது, வேகமா மூச்சு விட்டுட்டு, அப்புறம் ரொம்ப நேரம் மூச்சு விடாம இருப்பாங்க. சில சமயங்கள்ல தொண்டையில சளி கோத்துக்கிட்டு குர்…குர்னு ஒரு சத்தம் வரும், இத "மரணக் குரல்"னு கூட சொல்லுவாங்க.
4. சுத்தி என்ன நடக்குதுன்னு கவலைப்படாம, தனிமையையும் அமைதியையும் விரும்புவாங்க. பேசறத நிறுத்திடுவாங்க, இல்லாட்டி பழக்கப்பட்ட முகங்களைக் கூட அடையாளம் தெரியாம போகலாம்.
5. யூரின் போறது ரொம்பவே குறைஞ்சிடும், யூரின் கருப்பா மாறலாம். இது கிட்னி செயல்பாடு குறைஞ்சதற்கான அறிகுறி.
6. ரத்த ஓட்டம் குறையறதால, கை, கால்கள்ல தோல் வெளிறிப் போய், நீல நிறமாகவோ இல்லாட்டி திட்டு திட்டாகவோ மாறலாம். தொட்டுப் பார்த்தா சில்லுனு இருக்கும்.
7. தசைகள் தளர்ந்து போறதால, அவங்களால யூரின், மலம் போறதைக் கட்டுப்படுத்த முடியாது.
8. எந்த நேரம், எங்க இருக்கோம், யார் கூட இருக்கோம்னு குழப்பமா இருக்கலாம். சிலசமயம் இல்லாதவங்களைப் பார்க்கறது, அவங்ககிட்ட பேசறது மாதிரியான மாயத்தோற்றங்கள் ஏற்படலாம்.
9. சில சமயங்கள்ல பதட்டமா, அமைதியில்லாம இருப்பாங்க, இல்லாட்டி துணிகளை உருவுறது மாதிரியான செயல்கள்ல ஈடுபடலாம். இது வலி, மாத்திரையோட பக்க விளைவுகள் இல்லாட்டி உடம்புல ஏற்படும் மாற்றங்களால இருக்கலாம்.
10. சிலருக்கு வலி அதிகமாகலாம், ஆனா சிலருக்கு உடம்பு செயல்படாதபோது வலி குறையலாம். ஆனா, அவங்களுக்கு வலி இல்லாம பார்த்துக்கறது ரொம்ப முக்கியம்.
இந்த அறிகுறிகளைத் தெரிஞ்சுக்கறது மரணம் எப்ப வரும்னு துல்லியமா சொல்றதுக்காக இல்லை. உடம்பு எப்படி மெதுவா தன்னோட செயல்பாடுகளை நிறுத்துதுன்னு புரிஞ்சுக்கிறதுக்காகத்தான்.