பென்ஷன் வாங்குவோரா? வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க 3 எளிய வழிகள்!

நான்சி மலர்

Pension

1. ஓய்வூதியதாரர்கள் வங்கிக்கு நேரில் செல்லாமல், தங்களது வாழ்நாள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதாகச் சமர்ப்பிக்கலாம்.

Pension | Gemini image

2. இந்தச் செயல்முறைக்கு உங்களது ஆதார் எண், ஓய்வூதியக் கணக்கு விவரங்கள், ஓய்வூதிய ஆணை (PPO Number) மற்றும் கைபேசி எண் ஆகியவை கட்டாயம் தேவை.

Pension | Gemini image

3. ஆண்ட்ராய்டு கைபேசியில் 'Jeevan Pramaan Face App' செயலியைப் பதிவிறக்கம் செய்து இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Pension | Gemini image

4. கைபேசி கேமரா மூலம் முகத்தை ஸ்கேன் செய்து (Face Authentication) எந்தவித பயோமெட்ரிக் சாதனமும் இன்றிச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

Pension | Gemini image

5. அங்கீகாரத்தைப் பயன்படுத்த, கைபேசியில் 'AadhaarFaceRD' மற்றும் 'Jeevan Pramaan' ஆகிய இரண்டு செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

Pension | Gemini image

6. இந்திய தபால் துறையின் கீழ் செயல்படும் 'Postman' அல்லது கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாக வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் சான்றிதழைப் பதிவு செய்யலாம்.

Pension | Gemini image

7. பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு (Doorstep Banking - PSB) மூலம், குறைந்த கட்டணம் செலுத்தி வங்கி அதிகாரிகளை வீட்டிற்கே வரவழைத்துச் சான்றிதழ் வழங்கலாம்.

Pension | Gemini image

8. டோர்ஸ்டெப் பேங்கிங் சேவையைப் பெற [www.doorstepbanks.com](https://www.doorstepbanks.com) என்ற இணையதளம் அல்லது 'Doorstep Banking' செயலியைப் பயன்படுத்தலாம்.

Pension | Gemini image

9. வழக்கமாக நவம்பர் மாதம் முழுவதிலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் (சூப்பர் செனியர் குடிமக்களுக்கு அக்டோபர் மாதத்திலிருந்தே அனுமதி உண்டு).

Pension | Gemini image

10. சான்றிதழ் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டவுடன், உங்களது கைபேசி எண்ணிற்குச் சான்றிதழ் எண் (Pramaan ID) மற்றும் உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி வந்துவிடும்.

Pension | Gemini image
Repel ants | Gemini image
கெமிக்கல் இல்லாம எறும்புகளை ஒட்டுமொத்தமா விரட்டணுமா? இந்த ரகசியத்தை உடனே தெரிஞ்சுக்கோங்க!