இதை தெரிஞ்சுக்காம முலாம்பழம் வாங்காதீங்க! ஜூசியான பழத்தை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்!

கிரி கணபதி

கோடைக்கால வெயிலுக்கு இதமாக ஒரு கிளாஸ் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதே தனி சுகம் தான். ஆனால், வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் சரியான முலாம்பழத்தை எப்படிப் பார்த்து வாங்குவது என்பதில் உள்ள 10 சூப்பர் டிப்ஸ்களைப் பார்ப்போம்.

Melon

1. முலாம்பழத்தின் காம்புப் பகுதியில் முகர்ந்து பார்த்தால் நல்ல இனிமையான வாசனை வர வேண்டும். வாசனையே இல்லை என்றால் அந்தப் பழம் இன்னும் சரியாகப் பழுக்கவில்லை என்று அர்த்தம்.

Melon

2. பழத்தின் மேல் உள்ள வலை போன்ற கோடுகள் அடர்த்தியாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தான் அந்த முலாம்பழம் நல்ல தித்திப்பான சுவையுடன் இருக்கும்.

Melon

3. காம்பு இருந்த பகுதியை கட்டை விரலால் லேசாக அழுத்திப் பாருங்கள். அது சற்றே மென்மையாக உள்ளே சென்றால் பழம் நன்றாகப் பழுத்திருக்கிறது எனலாம்.

Melon

4. பழத்தை கையில் தூக்கிப் பார்க்கும்போது அதன் அளவுக்கு மீறிய கனம் இருக்க வேண்டும். கனமாக இருக்கும் பழங்களில் தான் அதிக சதைப்பற்று இருக்கும்.

Melon

5. பழத்தின் தோலில் பச்சை நிறம் அதிகமாக இல்லாமல் சற்று வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். பச்சை நிறம் அதிகமாக இருந்தால் அது பழுக்காத காயாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

Melon

6. தர்பூசணியைப் போலவே முலாம்பழத்தையும் விரல்களால் லேசாகத் தட்டிப் பார்க்கலாம். உள்ளே காலியாக இருப்பது போன்ற சத்தம் கேட்டால் அது மிகச்சிறந்த பழமாகும்.

Melon

7. பழத்தின் மேல் எந்தவொரு பெரிய கருப்புத் தழும்புகளோ அல்லது அழுகிய பகுதிகளோ இருக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக தொததொதவென மென்மையாக இருந்தாலும் அந்தப் பழத்தை தவிர்த்து விடுங்கள்.

Melon

8. முலாம்பழம் நல்ல உருண்டையான அல்லது சீரான ஓவல் வடிவத்தில் இருக்க வேண்டும். மேடு பள்ளமாக இருக்கும் பழங்கள் சீராகப் பழுக்காமல் சுவை குறைவாக இருக்கும்.

Melon

9. பழத்தின் தோல் பகுதி தொடுவதற்கு சற்று சொரசொரப்பாக இருக்க வேண்டும். வழுவழுப்பாக இருந்தால் அது இயற்கையாக முற்றிய பழமாக இருக்காது.

Melon

10. பழத்தை உங்கள் காதருகே வைத்து லேசாகக் குலுக்கிப் பாருங்கள். உள்ளே விதைகள் ஆடும் சத்தம் கேட்டால் அது நன்கு முற்றிய சுவையான பழமாகும்.

Melon

இந்த எளிமையான குறிப்புகளைப் பயன்படுத்தி இனிப்பான முலாம்பழத்தை வாங்கி இந்த கோடையை கூலாக கொண்டாடுங்கள்.

Melon
emmemerald
ஒரே ஒரு மரகதக் கல் உங்கள் தலையெழுத்தையே மாற்றுமா?