நான்சி மலர்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமக்கு நெருக்கமானவர்களின் குரலை அப்படியே அச்சு அசலாகப் போலி செய்து பண மோசடி செய்யும் 'டீப்ஃபேக் குரல் மோசடிகள்' இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த மோசடிகளில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க 10 முக்கிய வழிகள்.
1/10. யாராவது உங்களுக்கு நெருக்கமானவர்கள் பேசுவது போலக் கூறி, "விபத்து நடந்துவிட்டது", "போலீஸ் பிடித்துவிட்டது" என அவசரமாகப் பணம் கேட்டால், பதற்றமடைய வேண்டாம்.
2/10. உங்களுக்கு வந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு, அந்த நபரினுடைய உண்மையான மொபைல் எண்ணிற்கு நீங்களாகவே அழைத்துப் பேசி உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துங்கள்.
3/10. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசி ஒரு குறிப்பிட்ட ரகசிய வார்த்தையை (Code Word) முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நிஜமாகவே அவசர உதவி தேவைப்படும்போது அந்த வார்த்தையைக் கூறச் சொல்லுங்கள்.
4/10. "என் போன் தொலைந்துவிட்டது, நண்பன் போனில் இருந்து பேசுகிறேன்" என்று புதிய எண்ணில் இருந்து உறவினர் குரலில் பேசினால், உடனடியாக அதை நம்பிவிடாதீர்கள்.
5/10. எதிர்முனையில் பேசுவது உங்கள் உறவினரின் குரலாகவே இருந்தாலும், அவர்கள் மட்டுமே அறிந்த சில தனிப்பட்ட கேள்விகளைக் கேளுங்கள்.
6/10. சமூக ஊடகங்களில் உங்கள் குரல் பதிவுகள் அடங்கிய வீடியோக்களை பகிர்வதைத் தவிர்க்கவும். மோசடி செய்பவர்கள் உங்களின் குரல் மாதிரிகளை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ரீல்ஸ் வீடியோக்களில் இருந்துதான் திருடுகிறார்கள்.
7/10. AI மூலம் உருவாக்கப்படும் குரல்களில் சில சமயம் செயற்கைத்தனம் இருக்கும். வார்த்தைகளுக்கு இடையே விசித்திரமான இடைவெளி அல்லது மெஷின் பேசுவது போன்ற உணர்வு இருந்தால் உஷாராகிவிடுங்கள்.
8/10. சில சமயம் உங்கள் குரலில் உள்ள "ஆம்", "சரி" போன்ற வார்த்தைகளைப் பதிவு செய்து, அதைக் கொண்டு உங்கள் வங்கிக் கணக்குகளைத் தூண்டப் பயன்படுத்தலாம். அறிமுகமில்லாத எண்களிடம் பேசும்போது சுருக்கமாகப் பேசி முடித்துவிடுங்கள்.
9/10. மோசடி செய்பவர்கள் உடனடியாக UPI மூலம் பணத்தை அனுப்பச் வற்புறுத்துவார்கள். முறையான சரிபார்ப்பு இல்லாமல் எந்தவொரு புதிய UPI ID-க்கும் அவசரமாகப் பணம் அனுப்ப வேண்டாம்.
10/10. நீங்கள் ஏமாற்றப்பட்டாலோ அல்லது இது போன்ற மோசடி அழைப்புகள் வந்தாலோ, 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்.