மகாலெட்சுமி சுப்ரமணியன்
1/11. பெரும்பாலான வீடுகளில் டைல்ஸ், மார்பிள்ஸ் தான் போட்டு இருக்கிறது. சாதாரணமாக தரை துடைக்கும் லிக்விட்டோடு சில துளிகள் ஆசிட் சேர்த்து துடைக்க கறையின்றி பளிச்சென்று இருக்கும்.
2/11. சமையலுக்கு ஒரே விதமான எண்ணையை உபயோகிப்பதை விட இரண்டு மூன்று எண்ணைய்களை மாற்றி அல்லது அவற்றை கலந்து உபயோகிக்க சுவையோடு சத்தும் சேரும்.
3/11. வருட சாமான்களை வாங்கி சுத்தப்படுத்தி எடுத்து வைக்கும் போது பிளாஸ்டிக் தவிர்த்து, மண்பாண்டங்கள் இரும்பு அல்லது பீங்கான் பாத்திரங்களை உபயோகிக்க சுவை, நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
4/11. எப்போது ஜுஸ், சர்பத் என தயாரித்தாலும் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து ஐஸ் க்யூப்ஸாக்கி அதை உபயோகித்து சர்பத், ஜுஸ் தயாரிக்க சுவை நன்றாக இருக்கும்.
5/11. ஸ்மூதி வகைகள் தயாரிக்கும் போது முழுவதும் அரைக்காமல் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க சுவை மாறாமல், சத்துக்கள் நிரம்பிய ஸ்மூதி சாப்பிட சுவையாக இருக்கும்.
6/11. மிளகாய் தூள், குழம்பு தூள் தயாரிப்பது போல குளியல் பொடி, சத்துமாவுப் பொடிகள்தயாரித்து வைத்துக் கொள்ள சுலபமாக இருக்கும்.
7/11. காய்கறி தயாரிக்கும் ஜுஸரை ஒருமுறை தரமானதாக வாங்கி அதில் காய்கறிகளின் ஜுஸ் தயாரிக்க சுவையாக இருக்கும்.
8/11. காஃபி மேக்கரை காபி டிகாஷன் தயாரிக்க பயன்படுத்துவது போல செம்பருத்தி தேநீர், சீரகத் தண்ணீர், சுக்கு மல்லி காபி டிகாஷன் தயாரிக்க பயன்படுத்தலாம்.
9/11. இந்த கோடை சீசனில் உடல்சூடு அதிகமாக இருக்கும். படுக்கும் முன் விளக்கெண்ணெயை கால் உள்பாதங்களில் சில துளி விட்டு மசாஜ் செய்து விட்டு படுக்க உடல்சூடு குறையும். உடல் அசதி, சோர்வு அகலும்.
10/11. வாசல் தோரணங்கள், ஷோ பீஸை வேறாக மாற்றி அமைக்க பார்க்க நன்றாக இருக்கும்.
11/11. வருடத்திற்கு ஒருமுறை பழைய துணிகளை, பாத்திரங்களை மாற்றி விடுவது போல வீட்டின் திரைச்சீலைகள், சோஃபா கவரையும் மாற்றி விட வீடு புது லுக்கில் அழகாக இருக்கும்.