கிரி கணபதி
வீட்டில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலிகள் காலப்போக்கில் நிறம் மங்கி அழுக்காகிவிடுகின்றன. அவற்றை மீண்டும் பளபளப்பாக மாற்றுவது எப்படி என்று வாங்க தெரிஞ்சிக்கலாம்.
1. பேக்கிங் சோடா ஒரு சிறந்த கறை நீக்கியாகச் செயல்படுகிறது. இதனை நீரில் கலந்து நாற்காலியில் தேய்க்கலாம்.
2. வினிகர் இயற்கையான சுத்திகரிப்புத் தன்மை கொண்டது. இது நாற்காலியில் படிந்துள்ள பிசுபிசுப்பை எளிதில் நீக்கும்.
3. எலுமிச்சைச் சாறு கடினமான கரைகளை அகற்றும். மேலும் இது புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தையும் வழங்கும்.
4. வெள்ளை நிற டூத்பேஸ்ட்டை கறைகள் மீது தடவலாம். சிறிது நேரம் கழித்து மென்மையான துணியால் துடைக்கலாம்.
5. பாத்திரம் தேய்க்கும் திரவம் நாற்காலிகளைச் சுத்தம் செய்ய உதவும். இதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து பயன்படுத்தலாம்.
6. சுத்தம் செய்த பின் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவலாம். இது நாற்காலிகளுக்குப் புதிய பொலிவைத் தரும்.
7. உப்பு மற்றும் எலுமிச்சை கலவை சிறந்த ஸ்க்ரப்பராகும். இது துரு மற்றும் மங்குதலை நீக்கப் பயன்படுகிறது.
8. பேனா அல்லது மார்க்கர் கறைகளை எளிதாக நீக்கலாம். ரப்பிங் ஆல்கஹாலை பஞ்சில் நனைத்துத் துடைப்பது நல்ல பலனளிக்கும்.
9. மிகவும் அழுக்கான நாற்காலிகளுக்குப் ப்ளீச் பயன்படுத்தலாம். இதனை நீருடன் மட்டுமே கலந்து கவனமாகக் கையாள வேண்டும்.
10. மேஜிக் எரேசர் ஸ்பாஞ்ச் கறைகளை எளிதாக அழிக்கும். இதனைச் லேசாக ஈரப்படுத்தித் தேய்ப்பது போதுமானது.
இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் பழைய நாற்காலிகளைப் புதியவை போலப் பராமரிக்க இயலும்.