கிரி கணபதி
ஸ்நேக் பிளான்ட் செடியை ஒரு சிறிய இலையை வைத்து எளிதாக வளர்க்கலாம். இதைச் சரியாக வேர்விடச் செய்வதற்கான முறைகளைக் காண்போம்.
1. ஆரோக்கியமான இலையைத் தேர்ந்தெடுக்கவும். கூர்மையான கத்தியால் அதனை வெட்டி எடுக்கவும்.
2. வெட்டிய இலையைத் துண்டுகளாக நறுக்கவும். ஒவ்வொரு துண்டும் மூன்று அங்குலம் இருக்கட்டும்.
3. நறுக்கிய துண்டுகளை நிழலில் காயவைக்கவும். இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருப்பது அவசியம்.
4. கீழ்ப்பகுதியைச் சரியாக நினைவில் கொள்ளவும். தலைகீழாக வைத்தால் வேர்கள் வளரவே வளராது.
5. ஒரு கண்ணாடி குடுவையை எடுக்கவும். அதில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்கவும்.
6. இலைத் துண்டுகளை நீரில் வைக்கவும். கீழ்ப்பகுதி மட்டும் நீரில் முழ்கியிருக்க வேண்டும்.
7. குடுவையை வெளிச்சமான இடத்தில் வைக்கவும். நேரடி சூரிய ஒளி படுவதைத் தவிர்க்கவும்.
8. வாரத்திற்கு ஒருமுறை தண்ணீரை மாற்றவும். இது இலைகள் அழுகுவதைத் தடுத்து பாதுகாக்கும்.
9. சில வாரங்களில் வேர்கள் தோன்றும். சிறிய வேர்கள் வளர்வதைக் கண்காணிக்க முடியும்.
10. வேர்கள் நன்கு வளர்ந்ததும் எடுக்கவும். அவற்றைச் சிறிய தொட்டியில் மண்ணில் நடலாம்.
இந்த எளிய முறையைப் பின்பற்றுங்கள். உங்கள் வீட்டில் நிறைய ஸ்நேக் பிளான்ட் செடிகளை மிக எளிதாக வளர்க்கலாம்.