எறும்பும் வராது ஈரமும் ஆகாது... சர்க்கரையை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!

கிரி கணபதி

உங்கள் வீட்டில் சர்க்கரை டப்பாவில் ஈரப்பதம் சேர்ந்து கெட்டியாக மாறிவிடுகிறதா? இதை எளிதாகத் தவிர்க்க உதவும் எளிய வழிமுறைகளைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Sugar

1.  டப்பாவில் சிறிதளவு கிராம்புகளைப் போட்டு வைக்கலாம். இது ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன் எறும்புகள் வராமலும் முழுமையாகத் தடுக்கும்.

Sugar

2. சர்க்கரை டப்பாவை எப்போதுமே உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். அடுப்பிற்கு அருகில் வைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

Sugar

3. பிளாஸ்டிக் டப்பாக்களுக்குப் பதிலாகக் கண்ணாடி பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். இவை ஈரப்பதம் எளிதில் உள்ளே நுழைவதைச் சிறந்த முறையில் தடுக்கும்.

Sugar

4. சிறிய துணியில் கொஞ்சம் பச்சரிசியைக் கட்டி உள்ளே வைக்கலாம். அரிசி மிகச் சிறந்த முறையில் ஈரப்பதத்தை உறிஞ்சி பாதுகாக்கும்.

Sugar

5. சர்க்கரை எடுக்க ஈரமான கரண்டியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. இது சர்க்கரையை மிக விரைவாகக் கட்டியாக்கி வீணடையச் செய்துவிடும்.

Sugar

6. ஒரு பிரிஞ்சி இலையை டப்பாவின் அடியில் போட்டு வைக்கலாம். இது ஈரத்தன்மையைத் தடுத்து சர்க்கரையை எப்போதும் உதிரியாகப் பாதுகாக்கும்.

Sugar

7. காற்று புகாத இறுக்கமான மூடி கொண்ட டப்பாக்களைப் பயன்படுத்தவும். இதனால் வெளிக்காற்று உள்ளே செல்வது பெருமளவில் தடுக்கப்படும்.

Sugar

8. சில வறுத்த காபி கொட்டைகளை ஒரு துணியில் கட்டி வைக்கலாம். இவை காற்றில் உள்ள ஈரத்தை உடனடியாக இழுத்துக்கொள்ளும்.

Sugar

9. டப்பாவின் அடியில் ஒரு சிறிய டிஷ்யூ பேப்பரை விரித்து வைக்கலாம். இது ஈரப்பதத்தை ஈர்த்து சர்க்கரையை உதிரியாகவே வைத்திருக்கும்.

Sugar

10. புதிய சர்க்கரையைக் கொட்டும் முன் பழையதைக் காலியாக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் எளிதில் நீர்ர்த்துப் போக வாய்ப்புள்ளது.

Sugar

இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றினால் சர்க்கரை எப்போதுமே உதிரியாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

Sugar
Cloths
குப்பையில் போக வேண்டிய துணிகள்.. வீட்டின் அழகைக் கூட்டும் அற்புதப் பொருட்களாக மாறும் வித்தை!