வயதான பெற்றோருடன் நீங்கள் சேர்க்க வேண்டிய 10 சொத்துக்கள்: பணம், நகையை விட இதுதான் முக்கியம்!

நான்சி மலர்

வயதான பெற்றோர்கள் நம்மோடு இருக்கும் காலம் மிகவும் மதிப்புமிக்கது. காலம் கடந்து செல்வதற்குள், அவர்களுடன் நாம் சேர்த்து வைக்க வேண்டிய 10 மிக முக்கியமான நினைவுகள்..

parent memories

1/10. அவர்களின் சிறுவயது ஞாபகங்கள், சந்தித்த சவால்கள், தாத்தா-பாட்டியைப் பற்றிய கதைகள் ஆகியவற்றை அமர்ந்து கேளுங்கள். அதை ஒரு ஆடியோவாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்து கொள்ளுங்கள்.

Listening their stories

2/10. அவர்களுக்குப் பிடித்த உணவை அவர்களுடன் சேர்ந்து சமையுங்கள். சமையலறை சிரிப்புகளும், ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடும் தருணங்களும் என்றும் அழியாதவை.

cooking with them

3/10. அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர், படித்து வளர்ந்த பள்ளி/கல்லூரி, அவர்கள் நீண்ட நாட்களாகப் போக வேண்டும் என்று ஆசைப்பட்ட சுற்றுலா இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள்.

travel with them

4/10. அவர்களின் திருமண ஆல்பம், உங்கள் சிறுவயது புகைப்படங்கள் அடங்கிய பழைய ஆல்பங்களை அவர்களுடன் சேர்ந்து புரட்டிப் பாருங்கள்.

album memory

5/10. கைபேசியை ஓரமாக வைத்துவிட்டு மொட்டை மாடியில் அமர்ந்து, மாலை நேரத்து டீ குடித்துக்கொண்டே சாதாரணமாகப் பேசுங்கள். அவர்களின் மனதை அறிய முயலுங்கள்.

talk to them

6/10. மாலை நேரத்தில் அருகிலுள்ள பூங்காவிற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் கைகளைக் கோர்த்துக்கொண்டு நடக்கும்போது கிடைக்கும் பாதுகாப்பு உணர்வும், நிம்மதியும் தனித்துவமானது.

walking with them

7/10. அவர்கள் உங்களுக்காகச் செய்த தியாகங்களுக்கு மனதார நன்றி கூறுங்கள். அதேபோல், உங்கள் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ அவர்களைக் காயப்படுத்திய தருணங்களுக்கு மன்னிப்புக் கேளுங்கள்.

thank them

8/10. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளிலோ அல்லது அவர்களின் பிறந்தநாளின் போதோ அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளை வாங்கித் தந்து, குடும்பத்தோடு ஒன்றாகக் கொண்டாடி மகிழுங்கள்.

celebrate with them

9/10. அவர்களுக்குப் பிடித்த பழைய பாடல்களை ஒன்றாகக் கேட்பது, பழைய படங்களைப் பார்ப்பது, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது போன்ற நினைவுகளை உருவாக்குங்கள்.

watching movie

10/10. "எதுவாக இருந்தாலும் நான் உங்களைப் பார்த்துக்கொள்வேன்" என்ற வார்த்தையும், அன்பான அரவணைப்பும் அவர்கள் வாழ்நாளின் இறுதிவரை மறக்காத ஆகச்சிறந்த நினைவு.

support them
New Ott Releases | AI Image
கடைசி நிமிடம் வரை சீட் நுனியில் உட்கார வைக்கும் படங்கள்... OTT-ல் மிஸ் பண்ணிடாதீங்க!