அழகு சாதனப் பொருட்கள் முதல் செடி வளர்ப்பு வரை... தேங்காய் சிரட்டையின் அதிரடி பயன்கள் இதோ!

நான்சி மலர்

1/10. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், தேங்காய் சிரட்டைகளைக் கொண்டு ஸ்பூன், கிண்ணம், தேநீர் கோப்பை மற்றும் அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கலாம்.

smart ways to use coconut shell | AI image

2/10. சிரட்டையில் சிறிய துளைகள் இட்டு, அதில் செடிகளை வளர்க்கும் தொட்டியாகப் பயன்படுத்தலாம். இது செடிகளுக்குத் தேவையான ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும்.

smart ways to use coconut shell | AI Image

3/10. கோடைக்காலங்களில் பறவைகள் தாகத்தைத் தணிக்க, தேங்காய் சிரட்டையில் தண்ணீர் அல்லது தானியங்களை வைத்து வீட்டின் மொட்டை மாடியில் வைக்கலாம்.

smart ways to use coconut shell | AI Image

4/10. சிரட்டையைச் சுத்தம் செய்து, அதன் மேல் வர்ணங்கள் தீட்டி, கண்ணாடிகள் மற்றும் மணிகளை ஒட்டி கலைநயமிக்க அலங்காரக் கிண்ணங்களாக மாற்றி வரவேற்பறையை அழகுபடுத்தலாம்.

smart ways to use coconut shell | AI Image

5/10. சிரட்டையில் சிறிய துளைகளை இட்டு, அதனுள் சாம்பிராணி அல்லது ஊதுபத்தி வைத்துப் புகை போட, ஒரு அழகான பாரம்பரியச் சம்பிராணி தாங்கியாகப் பயன்படுத்தலாம்.

smart ways to use coconut shell | AI Image

6/10. குழந்தைகளுக்கான படிக்கும் மேஜையில், தேங்காய் சிரட்டையைப் பேனா அல்லது பென்சில் ஸ்டாண்டாக மாற்றிப் பயன்படுத்தலாம். இது அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க உதவும்.

smart ways to use coconut shell | AI Image

7/10. தேங்காய் சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கரியானது ‘ஆக்டிவேட்டட் கார்பன்’ குணம் கொண்டது. இது அழகு சாதனப் பொருட்களில் சருமத்தைப் பொலிவாக்கவும், மாசுக்களை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

smart ways to use coconut shell | AI Image

8/10. கிராமப்புறங்களில் இன்றும் தேங்காய் சிரட்டையிலான கரண்டிகளைத் தேய்க்கவோ அல்லது சமையல் தேவைகளுக்கோ பயன்படுத்துகிறார்கள். இது சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான நஞ்சையும் விளைவிக்காது.

smart ways to use coconut shell | AI Image

9/10. விலையுயர்ந்த பிளாஸ்டிக் அல்லது மண் தொட்டிகளை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டில் இருக்கும் சிரட்டைகளைப் பயன்படுத்தும்போது தேவையற்ற செலவு குறைகிறது.

smart ways to use coconut shell | AI Image

10/10. தேங்காய் சிரட்டைகளைத் தூக்கி எறியாமல் மறுசுழற்சி செய்வதன் மூலம், குப்பைகளின் அளவைக் குறைத்து இயற்கையோடு இணைந்து வாழ வழிவகுக்கிறது.

smart ways to use coconut shell | AI Image
tea waste benefits | AI Image
குப்பையில் போடப்படும் தேயிலை கழிவு தரும் மிரட்டலான மாற்றங்கள்! நீங்களும் ட்ரை பண்ணுங்க!