புக்க எடுத்ததும் தூங்குறவங்களுக்கு இதுதான் சரியான மருந்து!

நான்சி மலர்

Tips to avoid sleep while reading:

1/10. படுக்கையில் படுத்துக்கொண்டோ அல்லது மிகவும் tவசதியாக அமர்ந்தோ படித்தால் மூளைக்கு தூக்கத்திற்கான .சமிக்ஞை சென்றுவிடும். எனவே, நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள்.

Tips to avoid sleep while reading | AI image

2/10. மதிய உணவுக்குப் பின் அல்லது இரவு தாமதமாக) அப்போது படிப்பதைத் தவிர்த்துவிட்டு, காலை வேளை அல்லது மனது புத்துணர்ச்சியாக இருக்கும் நேரத்தை இதற்குத் தேர்ந்தெடுக்கவும்.

Tips to avoid sleep while reading | AI image

3/10. வெறுமனே கண்களால் வாசிப்பதை விட, முக்கியமான வரிகளை அடிக்கோடிடுவது (Underline), குறிப்புகள் எழுதுவது அல்லது பக்கங்களின் ஓரங்களில் கேள்வி கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மூளை விழிப்புடன் இருக்கும்.

Tips to avoid sleep while reading | AI image

4/10. மங்கலான வெளிச்சம் கண்களுக்குச் சோர்வைத் தந்து தூக்கத்தை வரவழைக்கும். எனவே, நீங்கள் படிக்கும் அறை அல்லது விளக்கு போதுமான பிரகாசத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Tips to avoid sleep while reading | AI image

5/10. தொடர்ந்து நீண்ட நேரம் படிக்காமல், 25 நிமிடங்கள் படித்துவிட்டு 5 நிமிடங்கள் சிறிய இடைவெளி விடவும். அந்த இடைவெளியில் சிறிது நடப்பது அல்லது தண்ணீர் குடிப்பது உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

Tips to avoid sleep while reading | AI image

6/10. மனதுக்குள் படிப்பதற்குப் பதிலாக சற்று சத்தமாகவோ அல்லது முணுமுணுப்பாகவோ படித்தால், கவனம் சிதறாமல் இருப்பதோடு தூக்கமும் வராமல் தடுக்கப்படும்.

Tips to avoid sleep while reading | AI image

7/10. உங்களுக்குப் பிடிக்காத கடினமான புத்தகங்களுடன் தொடங்குவதைத் தவிர்த்துவிட்டு, உங்களுக்கு மிகவும் பிடித்தமான தலைப்புகள் அல்லது சுவாரஸ்யமான நாவல்களுடன் தொடங்குவது ஆர்வத்தைத் தூண்டும்.

Tips to avoid sleep while reading | AI image

8/10. உடலில் நீர்த்தேக்கம் குறைந்தால் (Dehydration) எளிதில் சோர்வு ஏற்பட்டு தூக்கம் வரும். படிக்கும் போது அருகில் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்துக்கொண்டு அவ்வப்போது சிறிது குடிக்கவும்.

Tips to avoid sleep while reading | AI image

9/10. மடிக்கணினி அல்லது தொடுதிரை மூலமாகப் படிப்பது கண் அழுத்தத்தை அதிகரிக்கும். இயன்றால் அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பயன்படுத்துவது நல்லது.

Tips to avoid sleep while reading | AI image

10/10. கண்கள் வறண்டு போவதாலும் தூக்கம் வரலாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் படிப்பதில் இருந்து கண்களை விலக்கி, அறைக்கு அப்பால் உள்ள தூரமான பொருளை சில வினாடிகள் பார்க்கவும் (20-20-20 விதி).

Tips to avoid sleep while reading | AI image
home organization tips | AI image
உங்கள் வீட்டை சொர்க்கமாக மாற்றும் 10 எளிய வழிகள்!