நான்சி மலர்
புத்தகம் வாசிப்பது ஒரு அலாதியான இன்பத்தை தரும். நம் அறிவை வளர்க்க உதவும், கற்பனை திறனை அதிகரிக்கும். புத்தகம் படிப்பதால் நமக்கு கிடைக்கும் 10 நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
புத்தகம் வாசிப்பதால் நம் அறிவு வளரும். கலாச்சாரம், அறிவியல் போன்ற பல்வேறு விஷயங்களை நாம் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துக்கொள்ள உதவும்.
நல்ல கதைகளை படிக்கும் போது அதில் நம் சிந்தனை செல்வதால் அன்றாட வாழ்வில் இருக்கும் பிரச்னையை மறக்கிறோம். இதனால் மனஅழுத்தம் குறைகிறது.
தொடர்ந்து புத்தகம் படிப்பது மூலம் புதிய சொற்களை தெரிந்துக் கொள்ளலாம். இதனால் பேச்சுத்திறன், எழுத்துத்திறன் அதிகரிக்கும்.
புத்தகத்தில் படிக்கும் கதை, கதாப்பாத்திரம் போன்றவற்றை ஞாபகம் வைத்துக் கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
புத்தகம் வாசிக்கும் போது கவனத்தை ஒருமுகப்படுத்தி படிக்கும் போது கவனச்சிதறல் இல்லாமல் Focus ஆக இருக்க முடியும்.
ஒரு பிரச்னையை வெவ்வேறு கோணங்களில் பார்க்க வாசிப்புத்திறன் மிகவும் உதவுகிறது.
தூங்குவதற்கு முன் புத்தகம் படிப்பது கண் மற்றும் மூளைக்கு ஓய்வு அளித்து நல்ல உறக்கத்தை தரும்.
புத்தகம் வாசிக்கும் போது நம் கற்பனை திறன் அதிகரிக்கும். எழுத்தாளர் சொல்வதை மனக்கண்ணில் பார்க்கும் போது நம் படைப்பாற்றல் அதிகரிக்கும்.
மற்றவர்களின் கதைகள், போராட்டம், கஷ்டம் போன்றவற்றை புத்தகத்தின் மூலம் படிக்கும் போது அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் குணம் உருவாகிறது.
சிறந்த பொழுதுபோக்கு வேண்டும் என்று நிறைப்பவர்கள் கட்டாயம் புத்தகம் வாசிக்க வேண்டும். இதற்கு செலவழிப்பது குறைவு என்றாலும், இதனால் கிடைக்கும் அறிவு வாழ்நாள் முழுவதும் சிறந்த வழித்துணையாக நம்முடன் வரக்கூடியது.