செ.ஹரிஷ்
“என் நண்பன போல் யாரும் இல்ல இந்த பூமியில.. என் நட்புக்கு தான் ஈடே இல்ல இந்த பூமியில..!” என்ற பாடல் வரியை கேட்கும் பொழுது நமக்கும், நண்பர்களுக்கு இடையேயும் ஏற்படுகின்ற அன்பானது மலர்கிறது. பாடல் வரிக்கே இப்படி என்றால், நண்பன் பக்கத்தில் இருக்கும் போது சொல்லவா வேண்டும்..? அப்படிப்பட்ட நட்பின் ஆழத்தை உணர்த்துகின்ற பத்துப் பொன்மொழிகளை இந்த பதிவில் பார்ப்போம்.
மனசில் பட்டதை ஓவியமாக தீட்டுவதும், மனசில் பட்டதை காவியமாக வர்ணிப்பதும், மனசில் பட்டதை கோபமாக கொட்டுவதும் எல்லாம் ஓர் இடத்தில் தான் அது, நண்பனிடத்தில்..!
இன்பத்திலும் துன்பத்திலும் நிழல் போல் கூடவே இருப்பவன்..! நண்பன் என்ற சொல் வெறும் சொல்லல்ல.. ஓர் ஆனந்தம், ஆசை, நிம்மதி என்று சொல்லிக்கொண்டே போகலாம்..!
கண்ணீரைத் துடைப்பதற்கு காதலி மாறினாலும், உயிருள்ளவரை கண்ணீரை வரவிடாமல் உயிர்மூச்சாய் தொடரும் பந்தம் அது நட்பு மட்டுமே..!
வாளெடுத்து சண்டை போடும் பகைவீரன் அல்ல.. தோள் கொடுத்து துணையாக இருக்கும் படைவீரன்..!
தொடங்கிய இடம் தெரியவில்லை, பயணங்களோ முடிவதில்லை.. வேறொருவனாக இருந்தாலும் உயிருள்ளவரை உனக்கும் எனக்கும் உன்னதமாக உண்மையாக நீடித்து இருக்கும் உறவு அது நட்பு மட்டுமே.
காற்றின் திசைகளில் எல்லாம் கலந்திருக்கும் பல உறவுகளையும் தாண்டி, உயிர் மூச்சாய் என்னோடு இருக்கும் நண்பனே இதற்கெல்லாம் மேலான உறவு.
நட்புக்கு இலக்கணமாக; அன்பும், பரிவும், உண்மையும், உரிமையும், உறுதியும் அடிப்படையாக அமைகின்றன.
கடலின் ஆழத்தை விட, நட்பின் ஆழம் அளவிடப்பட முடியாத ஆழமாகும், அந்த ஆழத்தில் முத்துக்களை எடுப்பதும் அவர்களே, புதைப்பதும் அவர்களே.
நட்பு என்பது ஒரு மலரைப் போன்றது, அது அன்பால் மலர்ந்து, பாசத்தால் மணக்கும்.
நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது. ஆனால் உயிரைக் கொடுப்பதற்குத் தகுதியான நண்பன் கிடைப்பது அரிது..! உண்மையான நட்பு என்பது இவ்வுலகில், கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம்..!