பாரதி
உலகின் மிகச்சிறந்த மூன்று தத்துவஞானிகளில் ஒருவர் அரிஸ்டாட்டில். சாக்ரடீஸ், பிளேட்டோவிற்கு அடுத்தப்படியாக அரிஸ்டாட்டில்தான். இவர் கவிதை, இசை, நாடகம், அரசியல், உயிரியல் போன்ற பல்வேறு துறைகளிலும் புலமை வாய்ந்தவராக திகழ்ந்தார். அந்தவகையில் இவரின் 15 பொன்மொழிகள் பற்றிப் பார்ப்போம்.
புத்திசாலிகளைப் போல சிந்தியுங்கள், ஆனால் சாதாரண நபர்களைப் போல பேசுங்கள்.
தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன் என்று நான் எண்ணுகிறேன்.
யார் வேண்டுமானாலும் கோபப்படலாம் அது எளிதானது, ஆனால் சரியான நபருடன், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்திற்காக, சரியான முறையில் கோபப்படும் ஆற்றல் அனைவருக்கும் இல்லை. அது எளிதானதும் அல்ல.
உங்களை நீங்களே அறிய, உங்களுடன் நீங்களே நேரத்தை செலவிட வேண்டும், தனியாக இருப்பதற்கு நீங்கள் பயப்படக்கூடாது. உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும்.
தைரியமே அனைத்து நல்லொழுக்கங்களுக்கும் தாய், ஏனெனில் அது இல்லாமல், நீங்கள் மற்றவற்றைத் தொடர்ந்து செய்ய முடியாது.
கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை.
தனது அச்சங்களை வென்றவரே உண்மையிலேயே சுதந்திரமாக இருப்பார்.
ஒருவர் தான் என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிந்திருப்பது மட்டுமே போதாது, அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதையும் கூட அறிந்திருக்க வேண்டும்.
கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளாதவன் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியாது.
குணத்தை வடிவமைப்பதில் இசைக்கு நிறைய பங்கு இருப்பதால், அதை நாம் நம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.
தீய மனிதர்கள் பயத்தால் கீழ்ப்படிகிறார்கள். நல்ல மனிதர்கள் அன்பினால் கீழ்ப்படிகிறார்கள்.
நீங்கள் எதையாவது புரிந்துகொள்ள விரும்பினால், அதன் ஆரம்பத்தையும் அதன் வளர்ச்சியையும் கவனியுங்கள்.
நம் நண்பர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதைப்போலவே நாம் நம் நண்பர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையை ஒரே நேரத்தில் வாழவும் மற்றும் புரிந்துக்கொள்ளவும் முடியாது.
மனிதன் இலக்கைத் தேடும் ஒரு விலங்கு. அவன் தனது இலக்குகளை அடைய முயற்சித்தால் மட்டுமே அவனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.