பாரதி
புத்தரின் கருத்துக்கள் அன்று மட்டும் அல்ல என்றும் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். அந்தவகையில் அவரின் பொன்மொழிகள் குறித்துப் பார்ப்போம்.
எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விஷயங்களுக்காக கவலைப்பட வேண்டும்.
மாற்றம் ஒருபோதும் வலிமிகுந்ததல்ல, மாற்றத்தை எதிர்ப்பது மட்டுமே வலிமிகுந்தது.
வெளியிலிருந்து நம்மை யாரும் ஆள முடியாது. இந்த உண்மை நமக்குத் தெரிந்தவுடன், நாம் சுதந்திரமாகிவிடுகிறோம்.
உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும்.
நல்லதைச் செய்ய உங்கள் இதயத்தை தயார் செய்யுங்கள். அதை மீண்டும் மீண்டும் செய்யுங்கள், நீங்கள் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவீர்கள்.
தான் ஒரு ஞானி என்று நினைக்கும் ஒரு முட்டாள் வெறும் முட்டாள். தான் ஒரு முட்டாள் என்று தெரிந்த முட்டாள் உண்மையில் ஒரு ஞானி.
யாரிடம் குறைவான ஆசைகளும், மன அமைதியும் உள்ளதோ அவர்கள் கவலையின்றி வாழ்கிறார்கள்.
உண்மையைப் பேசுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஒருபோதும் கோபப்படாதீர்கள். இந்த மூன்று படிகளும் உங்களை இறைவனை நோக்கி வழிநடத்தும்.
நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்.
ஒரு கணத்தால் ஒரு நாளை மாற்ற முடியும், ஒரு நாளால் ஒரு வாழ்க்கையை மாற்ற முடியும், ஒரு வாழ்க்கையால் இந்த உலகை மாற்ற முடியும்.
நமக்கு நடக்கும் அனைத்திற்கும் காரணம் நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு.
எப்படி எதிர்வினையாற்றுவது என்று கற்றுக்கொள்ளாதீர்கள். எப்படி பதிலளிப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள்.
நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.
உங்கள் கடந்த காலத்தை அறிய விரும்பினால், உங்கள் நிகழ்காலத்தைப் பாருங்கள். உங்கள் எதிர்காலத்தை அறிய விரும்பினால், உங்கள் நிகழ்காலத்தைப் பாருங்கள்.
வானில், கிழக்கு மற்றும் மேற்கு என்ற பாகுபாடு இல்லை. ஆனால் மக்கள் தங்கள் மனதினால் வேறுபாடுகளை உருவாக்கி, பின் அவற்றை உண்மை என்று நம்புகிறார்கள்.