கல்கி டெஸ்க்
உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்.
வாழ்க்கையில் வெற்றி பெற, உனது வேலையை விருப்பத்துடன் செய்ய வேண்டும். அப்போதுதான் உன்னால் மிகப்பெரிய இடத்தை அடைய முடியும்.
வெற்றி என்பது இறுதியானதும் அல்ல, தோல்வி என்பது முடிவும் அல்ல.
நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது ஆனால் நாளையை சிறப்பாக உருவாக்க முடியும்.
வருங்காலத்தைப் பற்றிய கவலை வேண்டாம். நிகழ்காலத்தில் சிறப்பாய் செயல்பாட்டால் வருங்காலம் தன்னால் மாறும்.
உங்களது எதிர்காலத்தை உடனடியாக மாற்ற முடியாது, ஆனால் உங்களது பழக்கங்களை மாற்றலாம். அந்த பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும்.
படித்தால் வாழ்க்கையை மாற்ற முடிகிறதோ இல்லையோ, உங்களின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றலாம்.
எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கு தீர்வு காண வழி இருக்கும்போது, உனது பிரச்சனைக்கான தீர்வுக்கும் ஏதேனும் வழி இருக்கும்.
சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிதுதான். ஆனால் அதைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மிகக் கடினம்.
உனது தோல்விக்கான காரணத்தைத் தேடுவதை நிறுத்திவிட்டு, உன் வெற்றிக்குத் தேவையான விஷயங்களைக் கண்டறிய முற்படு.
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்பதற்காக பின் தொடராதே. உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான். கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி.
ஒவ்வொரு நாளும் உங்களுக்குக் கிடைக்கும் இரண்டாம் வாய்ப்பு.
இதுவரை ஒருவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர் புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை என அர்த்தம்.
உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும்.