Life Quotes: வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கவேண்டிய, தவிா்க்கவேண்டிய 9 விஷயங்கள்!

புவனா நாகராஜன்

முகம் காட்டும்  கண்ணாடி போலவே, வாழ்வில் நாம் நமது செயல்பாடுகளால் சிறந்த வாழ்க்கையை வாழலாம். அதற்கு கீழ்க்கண்ட நடைமுறைகள் நமது  செயல்பாடுகளில் இருக்கலாமே!

motivational quotes

மனதில் வைராக்கியம் இருந்தால் மிதிபட்ட இடத்திலிருந்தே மீளவும் துளிர்விடலாம்.

motivational quotes

எதையாவது மறக்க வேண்டும் என நினைத்தால் நட்பு, மற்றும் உறவுகள் செய்த துரோகத்தை மறக்கலாம்.  

motivational quotes

எதையாவது சாதிக்க வேண்டுமென நாம் நினைத்தால் தன்னம்பிக்கை, சோம்பல், விடாமுயற்சி, இவற்றை கைவிடவேண்டாம். 

motivational quotes

நீ நல்லவன் என்பதை  நீயே சொல்லிக்கொள்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை, நீ நல்லவன் என அடுத்தவர் சொல்வதே சாலச்சிறந்த ஒன்றாகும் .

motivational quotes

உயர்ந்த எண்ணம் கொண்டவர்களிடம் பழகினால் உனக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பே தேடிவரும்.

motivational quotes

விரோதி யாா் என ஆராய்ச்சி செய்வதைவிட, துரோகி யாா் என அடையாளம் காண்பதே அறிவாா்ந்த செயலாகும்.

motivational quotes

உண்மையாக பழகும் நபர்களிடம் வாழ்வது எளிதோடு கூடிய நல்லது, அதேநேரம்  அவர்கள் பழக்கம் பொய்யானது எனத் தொிந்தால்  அவர்களை  விட்டு விலகுவது அதைவிட நல்லது.

motivational quotes

வஞ்சகம், துரோகம், குரோதம், செய்நன்றி மறப்பது இவற்றை விட்டு விலகினால் மனசாட்சி நம்மிடமே இருக்கும்.

motivational quotes

நாம் செய்யும் செயல்களில் நமது எண்ணங்களில்  தூய்மை, நோ்மை, நம்பிக்கை இருந்தால் நமக்கு கிடைக்கும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

motivational quotes

இந்த ஒன்பது கட்டளைகளையும் கடைபிடித்து வாழுங்கள் நல்லதே நடக்கும், நன்மையே கிடைக்கும்! 

motivational quotes
Earth
பூமி பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்!