புக் படிக்கிற பழக்கம் விட்டுப்போச்சா? மீண்டும் ஆரம்பிக்க 10 சிம்பிள் டிப்ஸ்!

கிரி கணபதி

ஒரு காலத்துல புத்தகமும் கையுமா சுத்துன நமக்கு, இப்போ ஒரு பத்து பக்கம் படிக்கிறதுக்குள்ள கண்ணைக்கட்டுதா? ஸ்மார்ட்போன் உலகத்துல இதெல்லாம் சகஜம்தான். ஆனா, விட்ட பழக்கத்தை கொஞ்சம் ஸ்மார்ட்டா திரும்பக் கொண்டு வர முடியும். அதுக்கான 10 சிம்பிள் வழிகளைப் பார்ப்போம்.

Book Reading

1. எடுத்த உடனே 500 பக்க நாவல் வேண்டாம். தினமும் ஒரு 5 பக்கம் அல்லது 10 நிமிஷம் மட்டும் படிக்கிறத ஒரு ரூலா வெச்சுக்கோங்க. அதுவே போகப் போக உங்களுக்கே தெரியாம அதிகமாயிடும்.

Book Reading

2. போர் அடிக்கிற சப்ஜெக்ட் வேண்டாம். உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச சுயமுன்னேற்றப் புத்தகங்களோ, சுவாரஸ்யமான கதைகளோ எடுத்துப் படிங்க. அது உங்களை அடுத்த பக்கத்துக்கு தானா கூட்டிட்டுப் போகும்.

Book Reading

3.நீங்க ஒரு விஷயத்தைப் படிக்கும்போது, அதை வெச்சு எப்படி ஒரு சூப்பரான கன்டென்ட் உருவாக்கலாம்னு யோசிங்க. நம்ம வேலையோட வாசிப்பை இணைக்கும்போது, படிக்கிற ஆர்வம் டபுள் ஆகும்.

Book Reading

4. எங்க போனாலும் பேக்ல ஒரு புக் இருக்கட்டும். பஸ்ல போகும்போது, யாருக்காவது வெயிட் பண்ணும்போது சும்மா ஃபோனை நோண்டுறதுக்குப் பதிலா ரெண்டு பக்கம் புரட்டலாம்.

Book Reading

5. எப்போ பார்த்தாலும் ஒரே இடத்துல உட்கார்ந்து படிக்காம, பால்கனியிலயோ, மாடியிலயோ, அல்லது ஒரு அமைதியான கஃபேலயோ உட்கார்ந்து படிச்சுப் பாருங்க. அந்த ஃபீல் வேற லெவல்ல இருக்கும்.

Book Reading

6. படிக்கவே சுத்தமா நேரம் இல்லைனா, வேலை செஞ்சுகிட்டே ஆடியோ புக்ஸ் கேளுங்க. இதுவும் ஒரு வகையில நம்ம வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிவிட்டு, மீண்டும் புத்தகங்களை நோக்கி இழுக்கும்.

Book Reading

7. தூங்குறதுக்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி மொபைலை தள்ளி வெச்சிட்டு, ஒரு நல்ல புக் எடுத்துப் படிங்க. கண் எரிச்சலும் இருக்காது, நல்ல நிம்மதியான தூக்கமும் வரும்.

Book Reading

8. புத்தகத்துல நீங்க படிச்ச ஒரு நல்ல விஷயத்தை உங்க நண்பர்கள் கிட்டயோ, இல்ல உங்க பேஜ்ல ஒரு போஸ்ட்டாகவோ ஷேர் பண்ணுங்க. நாலு பேர் அதைப் பத்தி பேசும்போது, இன்னும் நிறைய படிக்கணும்னு மோட்டிவேஷன் கிடைக்கும்.

Book Reading

9. படிச்சு முடிச்ச இடத்துல பேப்பரை மடிச்சு வைக்காம, ஒரு நல்ல புக் மார்க் யூஸ் பண்ணுங்க. அடுத்த முறை புக்கைத் திறக்கும்போது அந்தப் பழக்கம் ஒரு சின்ன ஈர்ப்பை உருவாக்கும்.

Book Reading

10. இந்த மாசத்துக்குள்ள இந்த ஒரு சின்ன புக்கையாவது முடிச்சுடணும்னு டார்கெட் பிக்ஸ் பண்ணுங்க. முடிச்சதும் உங்களுக்கு நீங்களே ஒரு சின்ன ட்ரீட் வெச்சுக்கலாம்.

Book Reading

வாசிப்புப் பழக்கம்ங்கிறது ஜிம்முக்குப் போற மாதிரிதான். ஒரே நாள்ல ரிசல்ட் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணா, அதுவே நம்ம வாழ்க்கையோட ஒரு அங்கமா மாறிடும். இன்னைக்கே ஒரு நல்ல புக்கைத் திறங்க, பழசை எல்லாம் திரும்பக் கொண்டு வாங்க.

Book Reading
twinkle
The Secret History of Your Favorite Nursery Rhymes!