ஆர்.ஜெயலட்சுமி
அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான். அன்பு எதையும் சாதிக்க வல்லது மட்டுமல்ல அதிகாரத்தை அளிக்கவும் வல்லது.
விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது இளமையின் ரகசியம்.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது சக்தியின் இருப்பிடம்.
படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது அறிவின் ஊற்று.
நட்புடன் இருங்கள் அது சந்தோஷத்தின் ராஜபாட்டை.
கனவு காணுங்கள் அது நனவாகும் ஒருநாள்.
உழைப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது வெற்றியின் விலை.
ஆயுதம் தாங்காத அகிம்சையின் பலம் ராணுவ பலத்தை விட மேலானது.
மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகிவிட முடியாது.
உண்மையான அன்பை பேச்சின் மூலம் வெளிப்படுத்த முடியாது நம்முடைய சேவை தான் வெளிப்படுத்தும்.
சத்தியம் என்பது உண்மை பேசுவது மாத்திரம் அல்ல உள்ளத்தின் அளவிலும் உண்மையோடு இருத்தலே.
உலக மக்கள் நட்புடன் ஒருவரை ஒருவர் விரும்பி இருப்பதை பகிர்ந்து கொண்டு வாழ ஆரம்பிக்கும் போது தான் உலகில் அமைதியும் ஆனந்தமும் நிலைத்து நிற்கும்.
பிரார்த்தனை நமது நம்பிக்கையை சக்திவாய்ந்ததாக செய்கிறது.
நேர்மைக்கு பலன் கிடைக்குமானால் நெடுநாள் காத்திருக்க வேண்டும்.
அகிம்சை என்பது தனிப்பட்ட ஒருவரின் உயர்ந்த கொள்கை மட்டுமல்ல அரசியல் வழியும் ஆகும்.
மன்னித்தல் தண்டித்தலை விட சிறந்தது.