பாரதி
குழந்தைகளுக்கு ஜவஹர்லால் நேரு என்று சொல்வதை விட நேரு மாமா என்று சொன்னால்தான் தெரியும். அந்தளவுக்கு குழந்தைகள்மீது பிரியமாக இருந்தார் நேரு. ஆகையால்தான் அவர் பிறந்த தினத்தன்று குழந்தைகள்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேரு மாமா கூறிய ஆகச்சிறந்த 15 பொன்மொழிகள் பற்றி பார்ப்போம்.
உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும்.
சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன்.
ஒன்றை அடைவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல்.
கழிந்ததை கணக்கெடுத்துக்கொண்டே இருந்தால், இருப்பதை காணாமல் தொலைத்துவிடுவாய்!
தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை.
உங்கள் உடல்நலனை எப்படி பாதுகாக்கின்றீர்களோ அதுபோல நேர்மையையும் பாதுகாக்க வேண்டும்.
மிரட்டிப் பணியவைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே!
அழகும் சாகசமும் நிறைந்த அற்புதமான உலகில் வாழ்கிறோம். நமது கண்களைத் திறந்தால் மட்டுமே இவற்றைக் காண முடியும்.
செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம்.
உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒடுக்கிவிட முடியாது.
அமைதி இல்லையெனில், அனைத்து கனவுகளும் மறைந்துவிடும் அல்லது சாம்பலாகிவிடும்.
நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது. அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.
உலக வரலாற்றைப் படிப்பதைவிட, உலகில் வரலாறு படைப்பதே சிறந்தது.
வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். நாம் வேறுபாடுகளை மதித்து கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் என்பது நம் பொதுசொத்து, அதை நமது வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும்.
நேருவின் வாழ்க்கைத் தத்துவங்களைப் பின்பற்றி அவர் வழியில் நடப்போம்.