வாசுதேவன்
ஒருவருக்கு அனைத்தும் கற்று தரும் மூன்று விஷயங்கள்: எளிமை, பொறுமை, கருணை. மூன்றும் பொக்கிஷங்கள் ஆகும்.
சிறந்த போராளி ஒரு போதும் கோபப்படுவது இல்லை.
நீங்கள் நீங்களாகவே இருங்கள். மற்ற யாரோடும் ஒப்பிடாதீர்கள். போட்டிப் போடுவதை தவிருங்கள்.
ஆரோக்கியம் மிகப் பெரிய சொத்து. மன நிறைவு மிகப் பெரிய புதையல். நம்பிக்கை மிகச் சிறந்த நண்பன்.
எதிரியை குறைத்து மதிப்பிடுவதை விட பெரிய ஆபத்து வேறு ஒன்றும் இல்லை.
கத்தியை தொடர்ந்து கூர்மைப் படுத்திக் கொண்டேயிருந்தால் அது மழுங்கிப் போகும்.
அறிவு என்னும் புதையலுக்கு தேவையான சாவி பயிற்சியே ஆகும்.
தன் மீது நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு மற்றவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீர் மிகவும் மென்மையானது. அதனால் பூமி, மலைகளை ஊடுருவி செல்ல முடியும். கடினத்தை மென்மை வெல்லும் என்பதற்கு இது உதாரணம்.
நாம் அனைவரும் நாம் நினைப்பதைவிட அதிக திறன் கொண்டவர்கள்.
வாழ்நாளில் உங்களை தீங்குங்களில் இருந்து பாதுகாக்கும் சக்தி உள்ளது. உங்கள் உள்ளுணர்வை புரிந்துக் கொண்டால் மட்டுமே அது நடக்கும்.
ஒருவர் பெற்றுக் கொள்ள விரும்பினால் முதலில் கொடுக்க வேண்டும்.
இருமடங்கு பிரகாசமாக எரியும் சுடர் அரை மடங்கு குறைவான நேரம் தான் எரியும்.
அமைதி எல்லா திறமைகளுக்கும் மூலதனம்.