Motivational Quotes: அறிஞர்கள் சொன்னார்கள்! அவ்வளவும் உண்மை!!

ச. நாகராஜன்

மனிதர்களும் மலைகளும் சந்திக்கும்போது பெரிய காரியங்கள் நடக்கின்றன. இது தெருவில் அலைந்து திரிவதால் நடக்காது. -  வில்லியம்ப்ளேக்

Williams Blake

எதையும் செய்ய வேண்டும் என்று எண்ணும் ஒரு மனதிற்கு முடியாது என்பதே கிடையாது! - ஜான்ஹெய்வுட்

John Heywood

குணாதிசயமே விதி! - ஹெராக்லிடஸ்

Heraclitus

ஒருமுனைப்படுதலே எனது லட்சியம். முதலில் நேர்மை, அடுத்தது உழைப்பு. பிறகு ஒருமுனைப்படுதல்! - ஆண்ட்ரூ கார்னீகி

Andrew Carnegie

எவனுக்குத் தன்னிடம் நம்பிக்கை இருக்கிறதோ, அவன் மற்றவர்களை வழி நடத்துவான். - ஹொரேஸ்

Horace

வணிகம் என்பது யுத்தமும் விளையாட்டும் சேர்ந்ததாகும்! - ஆண்ட்ரே மௌரிஸ்

André Maurice

குருடர்கள் சாம்ராஜ்யத்தில் ஒற்றைக்கண் மனிதனே ராஜா! - ஸ்பானிய பழமொழி

Spanish Proverb

முக்கியமான விஷயம் என்னவெனில் கேள்வி கேட்பதை நிறுத்தக் கூடாது என்பது தான்! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Albert Einstein

மனித இயற்கையில் உள்ளார்ந்து இருக்கும் ஒரு கொள்கை, தான் புகழப்பட வேண்டும் என்பது தான்! - வில்லியம் ஜேம்ஸ்

William James

உலகின் மிகப் பெரிய பாடம் என்னவெனில், சில சமயம்  முட்டாள்கள்கூடச் சரியாக இருக்கிறார்கள் என்பது தான்! - வின்ஸ்டன் சர்ச்சில்

winston churchill

ஆயிரம் மைல் தூரம் கொண்ட ஒரு பயணம் ஒரு சிறிய காலடியை எடுத்து வைப்பதில் ஆரம்பிக்கிறது. - சீனப் பழமொழி

Chinese proverb

எது புதியதோ அது அவசியமாகத் தேவைப்படுவதாயிருக்கும் என்பதுமில்லை, எது பழையதோ அது தூக்கிப்போட வேண்டியதாயிருக்கும் என்பதுமில்லை. - ஹாரி ஜி. மெண்டல்ஸன்

harry g. mendelssohn

சலுகைகளை எப்படி மறுப்பது என்பதைக் கற்றுக்கொள்; இது ஒரு மிகப்பெரிய பயனுள்ள கலை. - தாமஸ் ஃபுல்லர்

Thomas puller

அதிர்ஷ்டத்தை எவன் ஒருவன் ஈர்க்கிறானோ அவன் தயார் செய்தல் என்ற காந்தத்தைக் கூடவே கொண்டு செல்கிறான். - வில்லியம் ஏ. வார்ட்

William A ward

சிறிய வாய்ப்புகளே பிரம்மாண்டமான வெற்றிகளுக்குப் பெரும்பாலும் காரணமாக அமைகிறது. - டெமாஸ் தனிஸ்

Demosthenes
Mouth
உடலில் நோய் இருக்கிறதா? வாயில் தெரியும் 10 முக்கிய அறிகுறிகள்!