பாரதி
பாகிஸ்தான் நாட்டின் எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிறிய ஊரில் பிறந்தார், மலாலா. பெண்கள் உரிமைக்காக போராடிய இவர், தாலிபான்களை எதிர்த்து பள்ளிக்கும் சென்றார். தனது இளம்வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். அந்தவகையில் அவரின் 15 பொன்மொழிகளைப் பார்ப்போம்.
பெண்களின் குரல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் அவர்களுக்கு சொல்லியே ஆக வேண்டும்.
பயப்பட வேண்டாம். நீங்கள் பயந்தால் முன்னேற முடியாது.
துப்பாக்கியால் பயங்கரவாதிகளைக் கொல்லலாம். ஆனால், கல்வியால்தான் பயங்கரவாதத்தைக் கொல்ல முடியும்.
ஒரு ஆணால், அனைத்தையும் அழிக்க முடியும் என்றால், ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது?
ஆண்களுக்கு இணையாக பெண்கள் பங்கேற்காமல் எந்தப் போராட்டமும் வெற்றிபெற முடியாது. உலகில் இரண்டு சக்திகள் உள்ளன. ஒன்று வாள், மற்றொன்று பேனா. இரண்டையும் விட வலிமை மிகுந்த சக்தி பெண்கள் சக்தி.
உலகம் முழுவதும் அமைதியாக இருக்கும்போது, ஒரு குரல் மட்டும் சக்திவாய்ந்ததாக மாறும்.
இப்போது நமது எதிர்காலத்தை உருவாக்குவோம். நாளைய கனவுகளை நனவாக்குவோம்.
அமைதியாய் இருப்பதா அல்லது எழுந்து நிற்பதா என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய தருணம் உள்ளது.
ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனாவால், இந்த உலகை மாற்ற முடியும்.
என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையில் எப்போதும் தடைகள் இருக்கும். ஆனால், நீங்கள் ஒரு இலக்கை அடைய விரும்பினால், கட்டாயம் தொடர வேண்டும்.
பிரச்னைகளை தீர்ப்பதற்கும், போருக்கு எதிராகப் போராடுவதற்குமான சிறந்த வழி பேச்சுவார்த்தை.
அரசியல்வாதிகள் மக்களை முட்டாள் ஆக்குவதற்கும், மோசமான நிர்வாகிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் அறியாமையே காரணம்.
உங்கள் பேனாக்களை யாராவது எடுத்துச் செல்லும்போது, கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.
கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை.
நாங்கள் பயந்தோம். ஆனால், எங்கள் பயம் எங்கள் தைரியத்தைப் போல வலுவாக இல்லை.