வாசுதேவன்
பல நூறண்டுகளுக்கு முன்பு மார்கஸ்
அரேலியஸ் என்ற ரோம பேரரசர் மற்றும் தத்துவஞானி
கூறிய மொழிகள் இன்றளவும் முக்கியத்துவம் வாயந்தவை. அவற்றை பற்றி பார்ப்போம்.
மனிதன் நினைக்கும் விஷயங்கள் அவனது மனதின் தரத்தை தீர்மானிக்கின்றது.
மக்களின் மனதை கவனித்தால் அவர்களின் உண்மை குணங்களை அறிந்துக் கொள்ள முடியும்.
ஒருவரது வாழ்க்கையின் மகிழ்ச்சி அவரது எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தது.
அடுத்தவர்களுடன் சகிப்புத் தன்மையுடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.
மற்றவர் மனதில் நடக்கும் எதுவும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்தாது.
ஒருவரின் எண்ணங்கள் உருவாக்குவது தான் அவரது வாழ்க்கை.
எந்தவொரு மனிதனுக்கும் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது எதுவும் நேராது.
நம்மை கோபப்படுத்தும் விஷயங்களை விட நமது கோபம் நமக்கு அதிக தீங்கை ஏற்படுத்தும்.
யாரவது என்னை இகழ்ந்தால் அது அவருடைய பிரச்சனை. நான் இழிவாக எதையும் செய்யாமலும், பேசாமலும் இருக்க வேண்டியது என் கவலை.
உங்கள் காயத்தின் உணர்வை நிராகரியுங்கள். காயம் தானாகவே மறைந்து விடும்.
ஒருவரின் வாழ்க்கை அவரது கற்பனையின் அடிப்படையில் வண்ணம் பூசப்படுகின்றது.
உங்கள் தோல்விகள் உங்களை உயர்த்த வழி வகுகின்றது.
தோல்விகளை கண்டு அஞ்சாமல் வாழ்வின் முன்னேற்றத்திற்கான அடி தளமாக கருதவும்.
ஒரு விஷயம் உங்களுக்கு கடினமாக இருந்தால், அதை யாராலும் சாதிக்க முடியாது என்று முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
நேரத்தை புத்திசாலிதனமாக பயன்படுத்துங்கள்.