கல்கி டெஸ்க்
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12-ம் தேதி, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்தநாளில் நாம் நினைவுகூர வேண்டிய சில எழுச்சி பொன் மொழிகள் இதோ..
உன்னை நீயே பலவீனம் என்று நினைத்துக் கொள்வது மிகப்பெரிய பாவம்!
பகை, பொறாமை ஆகிவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடம் திரும்பி வந்து சேர்ந்து விடும்!
உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதற்காகவும் உண்மையை துறக்கக் கூடாது!
பொய் சொல்லி தப்பிக்காதே! உண்மையை சொல்லி மாட்டிக்கொள்! பொய் வாழ விடாது உண்மை சாக விடாது!
துருப்பிடித்து தேய்வதை விட உழைத்து தேய்வதே நல்லது.
நீ வரம்பில்லாத வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும், இடமும் கூட ஒரு பொருட்டல்ல.
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதது.
எழுந்திருங்கள்... விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும், எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயுமே இருக்கின்றது.
நீ எதை செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து விடு.
முதன்மையான இடத்தில் இருக்க விரும்புகிறவன், கடைசியான இடத்தில் இருப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
விட்டுக்கொடுத்து எவன் பிறருடைய கருத்துக்களை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துக்கள் வெற்றி அடைகின்றன.
உங்களது அறையில் இருள் மண்டி கிடந்தால் இருள், இருள் என்று ஓலமிட்டும் கத்தி மார்பில் அடித்துக் கொள்ளாதீர்கள். ஒளி பெற ஒரு வழி இருக்கிறது. விளக்கை ஏற்றுங்கள் இருள் ஓடிவிடும்.