எஸ்.மாரிமுத்து
பத்து விரல்களும் பதறாது உழைத்தால் அஞ்சு விரலால் அஞ்சாது தின்னலாம்.
உழைப்பு, உடலைப் பலப்படுத்தும்: கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும்.
கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு இல்லை.
ஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால் உழைப்பு என்ற மருந்தை கொடு.
உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது.
கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்கு சமம்.
சோம்பல், தீய பழக்கம், வறுமை ஆகிய மூன்று தீமைகளை உழைப்பு போக்குகிறது.
அடிமையைப் போல உழைப்பவன் அரசனைப் போல உண்பான்.
உழைப்பு வறுமையை மட்டும் அல்லாமல் தீமையையும் விரட்டுகிறது.
செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு; உலகத்தை இயக்குவதும் அதுவே.
அளவற்ற உழைப்பை தான் மேன்மை என்கிறோம்.
கடின உழைப்பு நேர்மை, விடாமுயற்சி, உறுதியான சிந்தனை வெற்றிக்கு அடிப்படை.
உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் நீ வெற்றி காணுவாய்.
உழைப்பதற்கு தயங்காத வரையிலும் பிழைப்பதற்கு தடங்கள் இருக்காது.
திறமை உப்பை விட மலிவானது. ஆனால் திறமையானவர்களிடமிருந்து வெற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே.