பாரதி
ரோமின் மிகவும் புகழ்பெற்ற தத்துவஞானி செனிக்கா கூறிய வாழ்க்கை தத்துவங்கள்.
பகிர்ந்துக் கொள்ள நண்பர்கள் இல்லாவிட்டால், எந்த நல்ல விஷயமும் இனிமையானது அல்ல.
வளர்ச்சிக்கான பாதை மெதுவானது, ஆனால் அழிவுக்கான பாதை விரைவானது.
ஞானத்தைத் தேடுபவர் ஒரு புத்திசாலி, அதைக் கண்டறிந்ததாக நினைப்பவர் ஒரு பைத்தியம்.
தன்னைத்தானே ஆளக்கூடியவரே மிகவும் சக்திவாய்ந்தவர்.
உடல் உழைப்பு உடலைப் பலப்படுத்துவதைப் போலவே, சோதனைகளும் மனதைப் பலப்படுத்துகின்றன.
உங்களுக்குத் தெரியாவிட்டால், கேளுங்கள். அந்தக் கணத்தில் நீங்கள் ஒரு முட்டாளாக இருப்பீர்கள், ஆனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு புத்திசாலியாக இருப்பீர்கள்.
சூழ்நிலை மாறும்போது, திட்டத்தை மாற்றுவதில் தவறில்லை.
மனிதன் நிகழ்வுகளால் பாதிக்கப்படுவதில்லை, ஆனால் அவன் அவற்றைப் பார்க்கும் விதத்தினால் பாதிக்கப்படுகிறான்.
நாங்கள் எப்பொழுதும் எங்கள் வாழ்நாள் குறைவாக உள்ளது என்று புலம்புகிறோம், ஆனால் இந்த வாழ்க்கை முடிவே இல்லாதது என்பது போல் செயற்படுகிறோம்.
செல்வம் ஞானிகளின் அடிமை. முட்டாள்களின் எஜமான்.
ஒருவன் தான் எந்தத் துறைமுகத்துக்குப் பயணிக்கிறேன் என்று தெரியவில்லை என்றால், எந்தக் காற்றும் சாதகமாக இருக்காது.
ஒரு கதையை போலவே வாழ்க்கையும்கூட, அது எவ்வளவு நீளமானது என்பது முக்கியமல்ல. அது எவ்வளவு சிறப்பானது என்பதே முக்கியமானது.
உங்களைத் துன்புறுத்தும் விஷயங்களிலிருந்து நீங்கள் உண்மையிலேயே தப்பிக்க விரும்பினால், நீங்கள் வேறு இடத்துக்கு மாறவேண்டியதில்லை, வேறு நபராக மாறவேண்டும்.
ஒரு வழக்கை மறுதரப்பை விசாரிக்காமல் தீர்ப்பளிப்பவர், அவர் நியாயமாக தீர்ப்பளித்தாலும், அதை நியாயமாகக் கருத முடியாது.
ஒரு பாதையைக் கண்டுபிடியுங்கள் அல்லது ஒரு பாதையை உருவாக்குங்கள்.