எஸ்.மாரிமுத்து
சத்யம், தர்மம், தியாகம் ஆகியவற்றை பின்பற்றி நடப்பவனே உயர்ந்த மனிதன்!
சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள். உங்கள் பேச்சு மற்றவர்களது உணர்ச்சிகளையும் தூண்டி விடுவதாக அமையக்கூடாது!
நேர்மையற்ற செயல், நேர்மையற்ற பேச்சு, நேர்மையற்ற சிந்தனை ஆகியவை வாழ்க்கையின் துன்பங்களுக்கு அடிப்படை காரணங்கள்!
இறைவனை இதயத்தில் வைத்துக் கொள். உன்னால் விரும்பியதை நீ நிச்சயம் அடைவாய்!
உண்மை, தர்மம், அமைதி அன்பு ஆகியவற்றை பின்பற்றுவேதே மனிதனின் கடமை!
ஒருவருக்கு தாய்மொழி பேசுவதை போன்றதொரு இனிப்பு உள்ளதா சொல்லுங்கள்!
ஒழுக்கம் அறிவார்ந்த வாழ்க்கையின் அடையாளம் ஆனது!
மனிதனுக்கு மிகப்பெரிய பயம் உண்டென்றால் அது கடவுளின் அன்பை இழக்கும் பயமாகும்!
குருவை பின்பற்றி தீயவை எதிர் கொண்டு இறுதிவரை போராடி விளையாட்டை முடிவுக்கு கொண்டு வா!
ஒன்றை துறக்கப்படும் போது தீயசக்திகளுக்கு எதிராக போராடி மனதில் அது சரிபார்க்கப்படுகிறது!
கடவுள் பேச வேண்டும் என்பதில்லை, கீழே வரவேண்டும், மேலே செல்ல வேண்டும் என்பதில்லை... அவர் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார்!
நீ எதை நினைக்கிறாயோ? அதை பேசு; நீ எதை பேசுகிறாயோ? அதை செய்!
எப்போதெல்லாம், எங்கெல்லாம் நீ கடவுளுடன் தொடர்பில் இருக்கிறாயோ? அதுதான் தியானம்!
நம்பிக்கை நம் உயிர் மூச்சு போன்றது. நம்பிக்கை இல்லாமல் இந்த உலகில் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது!
அன்பு இல்லாத கடமை வருந்தத்தக்கது. அன்புடன் கூடிய கடமை விரும்பத்தக்கது. கடமை இல்லாத அன்பு தெய்வீகமானது!
சிறிய மனங்கள் குறுகிய சாலைகளை தேர்ந்தெடுக்கின்றன. உங்கள் மனப்பார்வையை விரிவுப்படுத்தி உதவி, இரக்கம் மற்றும் சேவையின் பரந்த பாதையில் செல்லுங்கள்!
யாருக்கும் எதிராக நச்சு வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் வார்த்தைகள் அம்புகளை விட மிகவும் ஆபத்தானவை!
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் அவரை பணிந்து போற்றி வணங்குவோம்!