நான்சி மலர்
நம் உணர்ச்சிகளுக்கும் நாம் பார்க்கும் நிறங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நிறங்கள் நம் மனதில் அதிர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
சிவப்பு நிறம் கோபம், காதல் ஆகியவற்றை குறிக்கும். பசியைத் தூண்டும், இதய துடிப்பை அதிகரிக்கும்.
மஞ்சள் நிறத்தை பார்க்கும் போது தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
நீல நிறம் ரத்த அழுத்தத்தை குறைத்து மனதிற்கு நிம்மதி தரும். அலுவலகங்கள், மருத்துவமனையில் நீலம் அதிகம் காணப்படும்.
வெள்ளை நிறம் குழப்பம் இல்லாத தெளிவான சிந்தனையை உருவாக்கும்.
பச்சை நிறம் கண்களுக்கு குளிர்ச்சியை தரும். இது மனதை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
ஊதா ராஜகம்பீரமான நிறம். இது கற்பனை திறனை அதிகரிக்கும்.
ஆரஞ்சு நிறம் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை நமக்கு அளிக்கும்.
பிங்க் நிறம் இரக்க குணத்தை தூண்டும் நிறம். கோபத்தை குறைத்து மனதை மென்மையாக்கும்.
கருப்பு நிறம் அதிகாரம் மற்றும் மர்மத்தை உணர்த்தும் நிறம். இது வலிமையான உணர்வைத் தரும்.
பிரவுன் நிறம் பாதுகாப்பான உணர்வையும், நேர்மையான எண்ணத்தை உருவாக்கும்.